சென்னையின் எஃப்சி AFC தொடரின் குரூப் ஸ்டேஜ் சுற்றை வெற்றியுடன் துவங்குமா!

சென்னையின் எஃப்சி AFC தொடரின் குரூப் ஸ்டேஜ் சுற்றின் முதல் போட்டியில் ஹோம் லெக் அடிப்படையில் ஐ-லீக் சாம்பியனான மினெர்வா பஞ்சாப்-பை ஏப்ரல் 03 ஆம் தேதி(புதன்கிழமை) அஹமதாபாத்தில் உள்ள அரேனா பை ட்ரான்ஸ்டேடியா-வில் இரவு 7:30 மணிக்கு எதிர்கொள்கிறது. 

இப்போட்டியை பற்றிய முன்னோட்டம்

சென்னையின் எஃப்சி

இலங்கையை சேர்ந்த கொழும்பு எஃப்சி-யை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி AFC தொடரின் குரூப் ஸ்டேஜ் சுற்றுக்கு முன்னேறிய சென்னையின் எஃப்சி அணி AFC தொடரில் பங்கேற்கும் முதல் ஐஎஸ்எல் அணி என்ற பெருமையோடு களமிறங்கவிருக்கிறது. 

முன்னதாக சென்னையின் எஃப்சி இந்த சீசன் ஐஎஸ்எல் தொடரில் அட்டாக்கிங் மற்றும் டிஃபென்ஸ் தவறால் அதிகளவிலான தோல்வியை சந்தித்து சோபிக்க தவறினாலும் கடைசி ஒரு சில போட்டிகளில் பெங்களூரு எஃப்சி, ஜம்ஷேத்பூர் எஃப்சி, எஃப்சி கோவா போன்ற பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது. 

பின்னர் விளையாடிய AFC ப்லே-ஆஃப் தகுதிசுற்று ஆட்டத்தில் கொழும்பு எஃப்சி-க்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு அணியை வீழ்த்தியது. அதன்பின்னர் விளையாடிய ஹீரோ சூப்பர் கோப்பை தொடரிலும் பலம் வாய்ந்த மும்பை சிட்டிஎஃப்சி-யை 2-0 கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. முக்கியமாக இந்த இரு போட்டியிலும் அணியின் ஜேஜே லால்பெக்லுவா நீண்ட நாட்களுக்கு பிறகு தனது கோல் கதவை திறந்தார். எனவே, அணியின் அட்டாக்கிங்-கில் முக்கிய பங்கு வகிக்கும் இவர் தனது சிறப்பான ஆட்டத்தில் மீண்டும் திரும்பியது அணிக்கு பலமாக இருக்கும். அடுத்து ஹீரோ சூப்பர் கோப்பை தொடரில் தமிழக வீரர் தன்பால் கணேஷ் காயத்தில் இருந்து மீண்டு நீண்ட இடைவேளைக்கு பிறகு அணியில் மீண்டும் திரும்பினார் எனவே, அணியில் அவர் மீண்டும் திரும்பியது அணிக்கு மேலும் பலம் சேர்க்கும். அடுத்து கோல்கீப்பர் கரஞ்சித் சிங் கடைசி ஒரு சில போட்டிகளில் சிறப்பாக திகழ்ந்து  வருகிறார். பின்னர் அணியின் டிஃபென்ஸ் எலி சபியா தலைமையில் அதிகளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 

மினெர்வா பஞ்சாப்

மினெர்வா பஞ்சாப்-பை பொறுத்தவரை இத்தொடரில் சிறப்பாக செயல்பட அணியை பலப்படுத்தும் விதமாக ஷிலாங் லஜோங் அணியின் கேப்டன் சாமுவேல் லால்முவான்புயா மற்றும் அய்ஸாவ்ல் எஃப்சி-யின் கரீம் நுரைனை ஒப்பந்தம் செய்துள்ளது. 

ஆடும் Xl வாய்ப்புள்ள வீரர்கள்

சென்னையின் எஃப்சி

கரஞ்சித் சிங், மெயில்சன் ஆல்வெஸ், டோன்டோன்போ சிங், எலி சபியா, லால்தின்லியானா ரென்த்லெய், கிறிஸ் ஹெர்ட், தாப்பா, ரஃபேல் அகஸ்டோ, ஐசக், சிகே வினீத், ஜேஜே லால்பெக்லுவா. 

மினெர்வா பஞ்சாப்

அர்ஷ்தீப் சிங், ஜார்ஜ் காய்ஸீடோ, ஆகாஷ் சங்வான், கரீம் நுரைன், தீபக் தேவ்ராணி, சாமுவேல் லால்முவான்புயா, அமந்தீப் சிங், தோய்பா சிங், ரோலண்ட் பிலாலா, ப்ரப்ஜோத் சிங், முகமது அல்-அம்னா.

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்