கொழும்புவை வீழ்த்தி, சென்னையின் எஃப்சி AFC தொடரின் குரூப் ஸ்டேஜில் நுழையுமா!

சென்னையின் எஃப்சி மற்றும் கொழும்பு எஃப்சி-க்கிடையே நடந்த AFC கோப்பை தகுதிச்சுற்றின் முதல் லெக் ஆட்டம் 0-0 கோல் கணக்கில் சமனில் முடிந்த நிலையில் இதன் முக்கியமான இரண்டாவது லெக் ஆட்டம் மார்ச் 13 ஆம் தேதி(புதன்கிழமை) அஹமதாபாத்தில் உள்ள அரேனா பை ட்ரான்ஸ்டேடியா-வில் இரவு 7:30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

இப்போட்டியை பற்றிய முன்னோட்டம்

சென்னையின் எஃப்சி

முதல் லெக் போட்டி கோல் ஏதுமின்றி சமனில் முடிந்த நிலையில் அப்போட்டியில் அணியின் டிஃபென்ஸ் வலுவாக காணப்பட்டது. தொடர்ந்து கொழும்பு எஃப்சி அளித்த அனைத்து அச்சுறுத்தல்களையும் சென்னையின் டிஃபென்டர்ஸ்கள் சிறப்பாக தடுத்துவந்தனர். ஆனால் அணியின் அட்டாக்-கிங் மீண்டும் போதிய அளவுக்கு சிறப்பாக காணப்படவில்லை. மேலும் அணி இப்போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாய நிலையில் உள்ளதால் ஜேஜே லால்பெக்லுவா, சிகே வினீத் போன்ற ஃபார்வர்ட்டு வீரர்கள் முன்வர வேண்டும். 

முன்னதாக இப்போட்டிக்கான சென்னையின் அணியில் காயத்தால் ஐஎஸ்எல் தொடரில் மற்றும் முதல் லெக் போட்டியில் இடம்பெறாத தன்பால் கணேஷ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த போட்டியில் கிறிஸ் ஹெர்ட் இடம்பெறவில்லை அவரும் இப்போட்டியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இப்போட்டியில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

சென்னையின் அணி இந்த ப்ளே-ஆஃப் தகுதிசுற்றில் வென்றால், AFC கோப்பையின் குரூப் 'இ' பிரிவுக்கு முன்னேறிவிடுவார்கள். குரூப் 'இ' பிரிவில் ஹீரோ ஐ-லீக் சாம்பியனான மினெர்வா பஞ்சாப், வங்கதேச லீக் சாம்பியனான அபாஹானி டாக்கா லிமிடெட் மற்றும் நேபால் லீக் சாம்பியனான மானங் மார்ஷ்யங்டி கிளப் உள்ளது. 

கொழும்பு எஃப்சி

சென்னையின் எஃப்சி-யை சந்திப்பதற்கு முன்பு கொழும்பு எஃப்சி பூட்டானிய அணியான ட்ரான்ஸ்போர்ட் யுனைடெட்-டை 9-2 கோல் கணக்கில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. பின்னர் முதல் லெக் ஆட்டமான கடந்த போட்டியிலும் அணி அதிகளவிலான வாய்ப்புகளை உருவாக்கி கொண்டே வந்த நிலையில் அதை கோலாக மாற்ற தவறியது எனவே, இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி AFC தொடரின் குரூப் ஸ்டேஜ் தொடருக்கு முன்னேறும் முனைப்பில் கொழும்பு எஃப்சி உள்ளது. 

ஆடும் Xl வாய்ப்புள்ள வீரர்கள்

சென்னையின் எஃப்சி

கரஞ்சித் சிங், மெயில்சன் ஆல்வெஸ், டோன்டோன்போ சிங், எலி சபியா, லால்தின்லியானா ரென்த்லெய், கிறிஸ் ஹெர்ட், தாப்பா, ரஃபேல் அகஸ்டோ, ஐசக், சிகே வினீத், ஜேஜே லால்பெக்லுவா. 

கொழும்பு எஃப்சி

முஹமது இம்ரான், ரத்னாயாக்கே, அலாவாதீன், சமீரா, புஸ்லஸ், சேகா, ஹேவாவித்தரனகே, அட்டேவு, ஃபசல், போட்ரிச், அகிப்.

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்