பெங்களூரு அணி இனி ஜெயிக்காதா? அல்லது அப்படி ஒரு தோற்றத்தை உண்டாக்குகிறார்களா?

ஹீரோ இந்திய சூப்பர் லீக் போட்டிகள் தொடங்கும்போது இருந்ததைவிட தற்போது பெங்களூரு அணி சற்று வித்தியாசமாக தோற்றமளிக்கிறது. 

கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை சென்ற சென்னையின் எஃப்சி அணியை இந்த சீசனில் தோற்கடித்து ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி இறுதிப் போட்டியாளராக  தேர்வு பெற்றுள்ளனர்.  கடந்த போட்டியில் பெங்களூரு அணி 2 – 2 என்ற கோல் கணக்கில் தங்களது சொந்த மண்ணில்  டிரா செய்தது. அதே நேரத்தில் பெங்களூரு அணி இன்னும் அதிக வெற்றிகளைப் பெறமுடியும், 

ஆசிய கோப்பை 2109 க்கான ஒரு நீண்ட குளிர் கால இடைவேளை விடப்பட்டது. அதற்குப் பின்னர் மும்பை சிட்டி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகளுடன் விளையாடிய பெங்களுரு அணி நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. கேரளா அணிக்கு எதிரான  ஆட்டத்தில் பெங்களூரு அணி சோபிக்கவில்லை. ஆனால் கோல் கீப்பர் குர்பீரித் சிங் ஆட்டம் சிறப்பாக இருந்தது. 

11 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றியை மட்டுமே பெற்று வந்த பெங்களுரு அணி தற்போது மோசமாக ஆடுவதற்கு  என்ன காரணம் ? அனைத்து பிளே ஆஃப் சுற்று ஆட்டங்களும் ஒரு மாதத்தற்குள்ளாவே இருக்கின்றன. தற்போது அதன் தொடர் தோல்வி கவலை அடையச் செய்துள்ளது. 

எங்கள் அணியில் மிக்கு நன்றாக விளையாடுகிறார். அதே போல் எங்கள் அணி வீரர்களும் சுழற்சி முறையில் களம் இறக்கப்படுகின்றனர். பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவதற்காக வீரர்களுக்கு நான் ஓய்வு கொடுக்க விரும்பினேன். அதனால் சுழற்சி முறையில் வீரர்களை களம் இறக்குவதே எங்கள் திட்டம் என்கிறார் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவர்ட்ரெட். 

பெங்களூரு அணி அட்டவணையில் மீண்டும் நான்கு இடத்துக்குள் வந்துள்ளது. அந்த அணி 15 ஆட்டங்களில் விளையாடி 31 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால் 30 புள்ளிகள் பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடலாம் என்பதால் அந்த அணி ஏற்கனவே பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றுவிட்டது. அதனால்தான் எட்மண்ட். ரினோ ஆண்ட்டோ, குட்சிம்ரத், அஜய் ஷட்டரி போன்ற வீரர்களை சுழற்சி முறையில் கார்லஸ் குவாட்ரெட் களம் இறக்குகிறார். 

தற்போது மிக்கு காயத்துக்கும் பிறகு மீண்டும் களம் இறங்கியிருக்கிறார். அதே போல்தான் நிஸுகுமாரும் தற்போது முழு உடல் தகுதியுடன் விளையாட வந்துள்ளார். கேப்டன் சுனில் ஷட்டரி வெளி இடங்களில் நடந்த  இரண்டு போட்டிகளில் இரண்டு கோல்களை அடித்து அசத்தியுள்ளார். 

கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது  பெங்களூரு ஒரு வலிமையான அணியாக திகழ்கிறது. கடந்த சீசனில் சுபாஷிஷ் போஸ், அல்வைன் ஜார்ஜ், லென்னி ரோட்ரிக்ஸ், ஜான் ஜான்சன், டோனி டோவல் மற்றும் எடு கார்சியா ஆகியோர் வெவ்வேறு நேரங்களில் அணிக்கு அழைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் தங்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். 

சுழற்சி முறையில் வீரர்களை களம் இறங்குவதும், ஓய்வும் அதான் பெங்களூரு அணியின் திட்டமாக உள்ளது. ஆனால் கடந்த 4 போட்டிகளில் பெங்களூரு அணியின் விளையாட்டு சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதால் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

பிளே ஆஃப் சுற்றின் அடுத்த மூன்று ஆட்டங்களில் பெங்களூரு அணி மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டும். அதற்கான மன வலிமையை பெங்களூரு அணி வீரர்கள் உருவாக்கி கொள்ள வேண்டும்.

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்