வாய்ப்புகளை தவறவிட்டது தோல்விக்கு காரணமாக இருந்தது – கான்ஸ்டான்டைன்

Picture Courtesy: AFC Media

ஏசியன் கோப்பை தொடரின் குரூப் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி அபுதாபியில் உள்ள ஜாயெத் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் எதிர்கொண்ட யுஏஇ அணியுடனான போட்டியில் 2-0 கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

யுஏஇ அணிக்கு எதிரானதோல்விக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்

"முதலாவது வெற்றிபெற்ற யுஏஇ அணியை வாழ்த்துகிறேன். இரு போட்டிகளில் வெற்றிபெற போதிய வாய்ப்புகளை உருவாக்கினோம். கடந்த போட்டியில் அதை சரியாக கோல் செய்தோம். ஆனால் இப்போட்டியில் அதை கோல் செய்ய தவறினோம். மேலும் யுஏஇ அணியினர் மூன்று முறை கோலை நோக்கி அடித்தனர் அதில் ஒரு முறை கோல் போஸ்ட் விளிம்பில் பட்டு வெளியேறியது மீதமுள்ள இரண்டு முறை கோல் சென்றது. என்றாலும் இப்போட்டியை சமன் செய்திருக்கலாம் ஆனால் தவறினோம்."

தொடர்ந்து அவர் வீரர்களின் விடா முயற்சியை வாழ்த்தி கூறுகையில்

"வீரர்கள் தங்களால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் உருவாக்கிய வாய்ப்புகளை கோலாக மாற்ற தவறினர். மேலும் இரு முறை கோல் நோக்கி அடித்தது கோல் போஸ்ட் விளிம்பில் பட்டு வெளியேறியது, யுஏஇ அணியின் கோல்கீப்பர் பலமுறை பந்தை சிறப்பாக தடுத்தார் மற்றும் இந்திய அணியினர் பல வாய்ப்புகளை கோல் செய்திருக்கலாம் எனது பார்வையில் இது தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த தோல்வி அணியில் உள்ள 23 வீரர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. என்றாலும் இந்த போட்டியில் இருந்து பல காரியங்களை கற்றுள்ளோம். தொடர்ந்து அடுத்த போட்டி மீது கவனம் செலுத்தி நல்ல முடிவை பெற முயற்சிப்போம்."

இரண்டாவது பாதியில் உதான்டா சிங்கை மாற்றியதை குறித்து தொடர்ந்து அவர் கூறுகையில்

"அவர் ஒரு சிறந்த வீரர், அவரால் ஒரு சில கிலோமீட்டர் வரை தக்கவைக்க முடியும். மேலும் இரண்டாவது பாதியில் அவர் சற்று சோர்பாக காணப்பட்டார். எனவே, ஜாக்கிசந்த் சிங்கை களமிறக்கினோம் அது எதிரணியை சற்று திணற வைத்தது." 

தொடர்ந்து அவர் கூறுகையில்

"வீரர்களின் தற்போதைய ஆட்டத்தை பார்த்தால் எந்த ஒரு அணிக்கும் சவாலாக தான் திகழ்வார்கள். மேலும் யுஏஇ அணியின் ஒரு சில வீரர்கள் என்னிடம் வந்து 'இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது என்று கூறினர்'. என்றாலும் தோல்வியை தழுவியது சற்று வருத்தமளிக்கிறது. தொடர்ந்து அடுத்த போட்டிக்கு நாளை முதலே பயிற்சி செய்ய போகிறோம்."

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்