இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தும் இளம் படைகள்

Picture Courtesy: AFC Media

இந்தியாவில் கால்பந்தை வளர்க்கவேண்டும் என ஐஎஸ்எல் என்று அழைக்கப்படும் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் தொடரை 2014 ஆம் ஆண்டு 8 அணிகளை கொண்டு தொடங்கினர். இத்தொடர் மூலம் ஒவ்வொரு சீசனிலும் பல இளம் கால்பந்து வீரர்கள் வளர்க்கப்பட்டு வெளிஉலகிற்கு அறிமுகமாகின்றனர். இதன் விளைவாக இந்த சீசன் ஏசியன் கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி மூன்றாவது அதிகபட்ச இளம் வீரர்களை கொண்ட அணியாக திகழ்கிறது. ஆக இது இந்திய நாட்டில் ஏற்பட்டு வரும் கால்பந்து வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. எனவே, இப்பதிவில் இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தும் இத்தகைய இளம் படையினரை பற்றி காண்போம் .

இந்த ஏசியன் கோப்பை தொடரில் ஜொலித்து வரும் இளம்வீரர்களான அனிருதா தாப்பா(சென்னையின் எஃப்சி), ஆஷிக் குருணியன்(எஃப்சி புனே சிட்டி), சுபாசிஷ் போஸ்(மும்பை சிட்டி எஃப்சி) மற்றும் உதான்டா சிங்(பெங்களூரு எஃப்சி) இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் இத்தகைய இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து இத்தொடரில் அனுபவ வீரர்கள் உள்ள நிலையில் ஆஷிக் குருணியனை முதல் ஆடும் XI வீரர்களில் வைத்து சுனில் சேத்ரி-யுடன் 'அட்டாக்'-கிங்கில் விளையாடவைத்தார் அவரும் தனது பங்குக்கு எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டார். இதைத்தொடர்ந்து அனிருதா தாப்பா இந்திய அணியில் வயதில் மிக சிறியவரான இவர் தாய்லாந்து அணிக்கு எதிராக அருமையாக ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும் சுபாசிஷ் போஸ் இரு போட்டிகளிலும் 'டிஃபென்டிங்'-இல் எதிரணிக்கு கடும் சவாலாக இருந்து வந்தார். கடைசியாக உதான்டா சிங் தொடர்ந்து இரு போட்டிகளிலும்  'அட்டாக்'-கிங்கில் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து இதுவரை இத்தொடரில் ஒரு 'அஸ்சிஸ்ட்' செய்திருக்கிறார்.   

தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் இத்தகைய இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து வரும் நிலையில் ஒருமுறை செய்தியாளர் சந்திப்பில்

"இளம் வீரர்கள் தவறுகள் செய்வார்கள் ஆனால் அவர்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்தால் கூடிய விரைவில் தங்களது தவறுகளை சரி செய்து எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவார்கள்." என கூறினார்.

தொடர்ந்து ஹீரோ ஐஎஸ்எல் சஹல், ச்சாங்டே, நிஷு குமார், சூசைராஜ், ச்சிங்லென்சனா சிங் போன்ற அடுத்த தலைமுறை இளம்வீரர்களை உருவாக்கி கொண்டுவருகிறது. ஆக இவ்வாறு இந்திய நாட்டில் கால்பந்து வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்திய மக்களின் பல வருட கனவான உலக கோப்பை-க்கு இந்திய அணி  2026 ஆம் ஆண்டிற்குள் தகுதி பெற்றுவிடும் என்றே கூறலாம்.

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்