ஐஎஸ்எல் உலகில் புதிய சாதனை படைத்த சென்னையின் எஃப்சி-யின் ஜேஜே லால்பெக்லுவா

கால்பந்து திருவிழாவான ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) 2014 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 5வது சீசன் நிறைவுக்கு வந்துள்ளது. மேலும் இத்தொடரில் இதுவரை அனைத்து சீசன்களில் கோல் செய்த ஒரு நபர் என்றால் அது சென்னையின் எஃப்சி-யை சேர்ந்த ஜேஜே லால்பெக்லுவா ஆவார். இவர் பெங்களூரு எஃப்சி-க்கு எதிரான போட்டியில் கோல் செய்து அந்த சாதனையை  தனது பெயரில் தக்கவைத்தார். எனவே, இப்பதிவில் அவரை கௌரவிக்கும் விதமாக இவரின் ஐஎஸ்எல் பயணத்தை பற்றி காண்போம். 

ஜேஜே லால்பெக்லுவா-வின் ஐஎஸ்எல் பயணம்

2014 ஆம் ஆண்டு முதல் லோன் வாயிலாக சென்னையின் எஃப்சி அணியில் இணைந்த இவர் அந்த சீசனில் 13 போட்டிகளில் 4 கோல் அடித்து அசத்தினார். பின்னர் இவரின் சிறப்பான ஆட்டத்தால் 2015 முதல் சென்னையின் அணி இவரை நிரந்தரமாக ஒப்பந்தம் செய்தது. இவர் 2015 முதல் 2017-18 சீசன் வரை 40 போட்டிகளில் 18 கோல் அடித்து அசத்தியுள்ளார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் 2015 ஆம் ஆண்டின் ஹீரோ ஐஎஸ்எல்-இன் வளர்ந்து வரும் இளம்வீரர் விருது வழங்கி கௌரவித்தனர்.  

நான்கு சீசனில் இரண்டு முறை சென்னையின் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்த இவர் சென்னையின் அணிக்கென அதிகபட்ச கோல் அடித்த வீரர் என்ற பெருமையையும் தக்கவைத்துள்ளார். 

ஜேஜே லால்பெக்லுவா-வின் வீழ்ச்சியும், எழுச்சியும்    

2018-19 சீசன் சென்னையின் அணிக்கு மட்டுமல்லாது ஜேஜே லால்பெக்லுவா-வுக்கும் தலைகீழாக சென்றுள்ளது. ஒருபுறம் இவர் சொதப்பலாக காணப்பட்டு வர மறுபுறம் சென்னையின் அணியும் சோபிக்க தவறியது. ஆக இவர் சுமார் 300 தினங்களுக்கும் மேல் தனது அணிக்கென கோல் செய்ய தவறினார். எனவே, இவரின் சொதப்பலான ஆட்டத்தை பார்த்த அனைவரும் AFC ஏசியன் தொடரின் இந்திய அணியில் இடம்பெற்றதை குறித்து விமர்சிக்க தொடங்கினர். 

ஆனால் இவர் தனது விமர்சனத்தை எல்லாம் ஓரம்கட்டி, AFC ஏசியன் கோப்பை தொடரில் தாய்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக வந்த இரண்டாவது நிமிடத்தில் அருமையாக ஒரு கோல் அடித்து தனது கோல் கதவை திறந்ததோடு, இந்திய அணியை 4-1 கோல் கணக்கில் வெற்றிபெற உதவினார். இதனைத்தொடர்ந்து மூன்றாவது சர்வதேச இடைவேளை முடிந்து ஹீரோ ஐஎஸ்எல் மீண்டும் தொடர நார்த்ஈஸ்ட், புனே போட்டிக்கு பிறகு பலம் வாய்ந்த பெங்களூரு எஃப்சி அணியை சென்னையின் எஃப்சி சந்தித்தது. அப்போட்டியில் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் க்ரெகோரி இந்த சீசனில் முதல் முறையாக ஜேஜே லால்பெக்லுவா-வுக்கு கேப்டன் பொறுப்பை வழங்கினார் அவரும் அப்போட்டியில் எழுச்சி கண்டு அருமையாக ஒரு கோல் அடித்து பெங்களூரு எஃப்சி-யை 2-1 கோல் கணக்கில் வெல்ல உதவினார். எனவே, அதன்மூலம் ஐஎஸ்எல் தொடரில் தனது கோல் கதவை திறந்ததோடு, அனைத்து சீசன்களிலும் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் தக்கவைத்தார். 

இவரைக்குறித்து சென்னையின் எஃப்சி-யின் பயிற்சியாளர் ஜான் க்ரெகோரி-யின் கருத்து

அவருக்கு கெட்ட நேரம் இருந்தால் சற்று சோபிக்க தவறுவார். ஆனால் ஒருமுறை கோல் செய்ய தொடங்கினால் பின்னர் தொடர்ச்சியாக தனது கோல் மழையை பொழிவார். மேலும் கடந்த சீசனிலும் தொடர்ச்சியாக சொதப்பலாக காணப்பட்டார் ஆனால் பின்னர் ஒருமுறை கோல் செய்ய தொடங்கிய அவர் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல போட்டிகளில் கோல் செய்தார். 

AFC கோப்பையில் சென்னையின் அணியில் இவரின் முக்கியத்துவம்

இந்த சீசனில் சென்னையின் அணியின் 'ப்லே-ஆஃப்ஸ்' கனவு கலைந்தாலும் அணி அடுத்து இந்திய அணியின் சார்பாக AFC கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. எனவே, மீதமுள்ள போட்டிகளில் சென்னையின் அணியின் வீரர்கள் வென்று அணியின் கௌரவத்தை காப்பாற்றுவதோடு, தங்களது நம்பிக்கையையும் வளர்க்கவேண்டும். மேலும் அணியின் நட்சத்திர வீரரான கால்டெரோன் அணியிலிருந்து விலகியதால் 'அட்டாக்'-கிங்கில் ஜேஜே லால்பெக்லுவா பெங்களூரு-க்கு எதிரான போட்டியை போல் தொடர்ந்து முன் வந்து AFC கோப்பையிலும் இந்திய அணியின் சார்பாக சென்னையின் எஃப்சி அணியில் ஜொலிக்க வேண்டும்.

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்