மும்பை சிட்டி வாய்ப்புகளை பயன்படுத்தியது, நாங்கள் தவறினோம் - ஜான் க்ரெகோரி

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்)-இன் ஐம்பதாவது போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 2-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி-யை வீழ்த்தியது. இதன் மூலம் சென்னையின் எஃப்சி இந்த சீசனில் எட்டாவது தோல்வியை தழுவியிருக்கிறது. மும்பை சிட்டி எஃப்சியின் சார்பாக ரேய்னியர் ஃபெர்னான்டஸ், மோடோ சௌகௌ சிறப்பாக தலா ஒரு கோல் அடித்து அணியை வெற்றிபெற உதவினர். 

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தோல்வியை குறித்து சென்னையின் எஃப்சி-யின் தலைமை

பயிற்சியாளர் ஜான் க்ரெகோரி கூறியதாவது

"முதல் பாதியில் மும்பை அணி ஒரு முறை தான் கோலை நோக்கி அடித்தது அதையும் சிறப்பாக கோல் ஆக்கியது. தொடர்ந்து பந்து அதிகபட்சமாக எங்கள் வசம் காணப்பட்டது. அதிக வாய்ப்புகளும் கிடைத்தது ஆனால் தவறவிட்டோம். மேலும் எதிரணியை விட அதிக 'பாஸ்' சென்னையின் அணி தான் செய்தது. தொடர்ந்து சென்னையின் அணிக்கு ஒன்றின்பின் ஒன்றாக வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது ஆனால் அனைத்தையும் தவறவிட்டனர். இந்த சீசன் முழுவதும் அத்தகைய தவறையே தொடர்கிறோம். மறுபுறம் மும்பை அணி கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி ஆட்டத்தை எடுத்து சென்றது." 

மேலும் இன்று ஜேஜே லால்பெக்லுவாவை சேர்க்காததை குறித்து அவர் கூறுகையில்

"கார்லோஸ் சாலோமை முக்கிய ஸ்ட்ரைக்கராக வைத்து விளையாட முயற்சி செய்தேன் ஆனால் அவரும் மும்பை 'டிஃபென்ஸை' கடந்து கோல் செய்ய தவறினார். மேலும் ஜேஜே தொடர்ந்து சிறப்பாக விளையாடி இருந்தால் இன்றைய முதல் கட்ட அணியில் இடம்பிடித்திருப்பார்." 

தற்போது உள்ள சென்னையின் அட்டவணையை குறித்து அவர் கூறுகையில்

"கடைசி 12 நாட்களில் 4 போட்டியை சந்திருக்கிறோம் இத்தகைய அட்டவணை எங்களுக்கு கடினமாக உள்ளது. கடந்த சீசனில் இத்தகைய அட்டவணையை எதிர்கொண்டோம் ஆனால் இந்த    

சீசனில் நாங்கள் அதே போல் இல்லை. மேலும் நார்த்ஈஸ்ட் மற்றும் டெல்லி அணியினர் இதையே கூறினர். ஆனாலும் அதை சாக்காக கூறவில்லை கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதே தோல்விக்கு பெரிய காரணம்." 

சென்னையின் எஃப்சி அடுத்ததாக டெல்லி டைனோமோஸ் எஃப்சி-யை டிசம்பர் 15 ஆம் தேதி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் எதிர்கொள்கிறது.

 

 

 

 

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்