சென்னையின் எஃப்சி வீரர்கள் உட்பட பல ஐஎஸ்எல் வீரர்களுக்கு இந்திய யு-23 அணியில் அழைப்பு

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள யு-23 AFC சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றை முன்னிட்டு பயிற்சிக்கென 37 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகபட்சமான வீரர்கள் ஹீரோ ஐஎஸ்எல் தொடரை சேர்ந்தவர்கள் என்பது குறிபிடித்தக்கது. 

2018-19 ஹீரோ ஐஎஸ்எல் சீசனில் பல இளம் கால்பந்து சூப்பர்ஸ்டார்கள் தடம்பதித்துள்ளனர். அதன் விளைவாக கேரளா அணியை சேர்ந்த தீரஜ் சிங் மற்றும் சஹல் அப்துல் சமத், டெல்லி அணியை சேர்ந்த லாலியன்சுலா சாங்டே மற்றும் வினித் ராய், புனே அணியை சேர்ந்த ஆஷிக் குறுணியன், ஏடிகே அணியை சேர்ந்த கோமல் தட்டல் போன்ற பல வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

சென்னையின் எஃப்சி-யை பொறுத்தவரை அனிருதா தாப்பா மற்றும் ஜெர்ரி லால்ரின்ஸ்வாலா அணியில் இடம்பிடித்துள்ளனர். முன்னதாக அனிருதா தாப்பா இந்திய சீனியர் அணியிலும் பல போட்டியில் பங்கேற்று அணியை வெற்றிபெற உதவி இருக்கிறார். இவரை தொடர்ந்து ஜெர்ரி லால்ரின்ஸ்வாலா தற்போது இந்திய அணியில் இடம்பெற்றது சென்னையின் எஃப்சி-க்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.  

அறிவிக்கப்பட்டுள்ள வீரர்களுக்கான பட்டியல்.

கோல்கீப்பர்ஸ்: தீரஜ் சிங் மோய்ரங்தம், ப்ரப்சுகன் சிங் கில், முகமது நவாஸ், அர்ஷ்தீப் சிங்.

டிஃபென்டர்ஸ்: நிஷு குமார், கமல்ப்ரீத், ப்ரோவட் லக்ரா, போரிஸ் சிங், சஜித் தோட், சாய்ருவட்கிமா, சர்தக் கோலுய், கௌரவ் போரா, நரேந்தர் கஹ்லோட், மெஹ்தாப் சிங், அன்வர் அலி, வுங் முய்ரங், ஆஷிஷ் ராய், ஜெர்ரி லால்ரின்ஸ்வாலா, சஹில் பன்வார்.

மிட்ஃபீல்டர்ஸ்: லிஸ்டன் கொலாக்கோ, லாலியன்சுலா சாங்டே, ஆஷிக் குரூனியன், வினித் ராய், அனிருத் தாப்பா, சஹல் அப்துல் சமத், அமர்ஜித் சிங், தீபக் டங்ரி, ரோஹித் குமார், சுரேஷ் சிங், கோமல் தட்டல், ராகுல் கேபி.

ஃபார்வர்ட்ஸ்: டேனியல் லால்லிம்புயா, ஹிதேஷ் ஷர்மா, ரஹீம் அலி, சாமுவேல் ஜே லிங்டோ க்நிஷி, ரோஹித் டானு, ஜெர்ரி மாவிஹ்மின்தாங்கா.

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்