இது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய நாளாக இருக்கும் - ஜான் க்ரெகோரி

சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்)-இன் எழுபத்தி மூன்றாவது போட்டியில் போட்டியில் சென்னையின் எஃப்சி 2-1 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி-யை வீழ்த்தியது. இதன்மூலம் சென்னையின் எஃப்சி இத்தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்றதோடு சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது. 

இப்போட்டியில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள்

  • 32'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் ஜேஜே லால்பெக்லுவா இந்த சீசனில் தனது முதல் கோல் அடித்தார்.
  • 43'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் க்ரெகோரி நெல்சன் கோல் அடித்து அணியை 2-0 என முன்னிலைப்படுத்தினார்.
  • 57'வது நிமிடத்தில் பெங்களூரு எஃப்சி-யின் சுனில் சேத்ரி கோல் அடித்து ஆட்டத்தை 2-1 என எடுத்துச்சென்றார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் வெற்றி பெற்றதை குறித்து சென்னையின் எஃப்சி-யின் தலைமை பயிற்சியாளர் ஜான் க்ரெகோரி கூறுகையில்

"இன்றைய ஆட்டத்தை விட பல போட்டிகளில் சிறப்பாக  விளையாடி இருக்கிறோம் ஆனால் கடைசியில் எதிர்பார்த்த முடிவை பெற தவறினோம். முதல் கோல், அடுத்து இரண்டாவது கோல் அடித்து பின்னர் கோல்களை தவறவிட்டு தோல்வியை தவறி இருக்கிறோம். முன்னதாக கடந்த சீசனில் வெற்றி பெறுவதை ஒரு பழக்கமாக வைத்திருந்தோம். ஆனால் இந்த சீசனில் எல்லாம் தலைகீழாக சென்றுள்ளது."

தொடர்ந்து அவர் கூறுகையில்

"பெங்களூரு அணி இன்று எங்களிடம் இருந்து சிறந்ததை கொண்டு வர உதவியது. தொடர்ந்து பெங்களுரு அணிக்கு எதிராக இதுவரை நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறோம். இது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய நாளாக இருக்கும். மேலும் இந்த வெற்றி எனக்கு தோல்வியினால் அடைந்த அனைத்து வருத்தத்தையும் மறக்க உதவும்.  சிகே வினீத் இன்று வேறு இடத்தில் சிறப்பாக விளையாடினார் மேலும் தொடர்ந்து அவர் கடினமாக உழைத்து வருகிறார். அடுத்து ஜேஜே இன்று கேப்டனாக செயல்பட்டு அருமையான ஒரு கோலை பதிவு செய்தார். தொடர்ந்து அடுத்து சென்ற இரண்டாவது கோலும் மிகச்சிறப்பாக இருந்தது. மேலும் ஆட்ட தொடக்கத்தில் ரால்டே-வை இழந்தது சற்று அதிர்ச்சியாக இருந்தது ஆனால் கிறிஸ் ஹெர்ட் அதை பூர்த்தி செய்தார். கடைசியில் ஒரு அணியாக அனைவரும் மிக கடினமாக செயல்பட்டனர்." 

அடுத்து அவர் பெங்களூரு எஃப்சி-யை குறித்து கூறுகையில்

"பொதுவாகவே பெங்களூரு எஃப்சி அணி கடைசி வரை ஆட்டத்தை எடுத்து சென்று சமன் அல்லது வெற்றி பெறும். உதாரணத்துக்கு நார்த்ஈஸ்ட் அணியுடன் 1-1 என இருந்து 2-1 என வென்றது. பின்னர் கடைசியாக கேரளா அணியிடம் 2-0 என இருந்து 2-2 என சமன் செய்தது. ஆக பெங்களுரு எஃப்சி-யிடம் கடைசி விசில் வரை ஆட்டத்தை எடுத்து செல்லும் திறன் உள்ளது. ஆனால் இன்று முதல் கோல்க்கு பிறகு பெனல்டி பாக்ஸில் எதிரணியை அறிந்து சென்னையின் அணியின் டிஃபென்டர்ஸ்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். அது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது."

அடுத்த மேட்ச் அட்டவணை

சென்னையின் எஃப்சி அடுத்து கேரளா ப்லாஸ்டர்ஸ் எஃப்சி-யை பிப்ரவரி 15 ஆம் தேதி கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்