ஜேஜே லால்பெக்லுவா - இந்திய கால்பந்து உலகில் அதிகம் பாராட்டப்படாத ஒரு வீரர்

Picture courtesy: AFC Media

தற்போதைய இந்திய அணியில் சுனில் சேத்ரிக்கு அடுத்ததாக அதிக கோல் அடித்த நபர் ஜேஜே லால்பெக்லுவா ஆவார். இந்திய அணியில் இவரின் பங்களிப்பு அதிகபட்சமாக இருந்தும் இவர் இந்திய மக்களால் அந்தளவுக்கு பாராட்டப்படாத வீரராக திகழ்கிறார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தில் நீடிக்க தவறுவது இவரின் மிகப்பெரிய குறையாகும். கடந்த ஆண்டும் தொடர்ந்து சொதப்பலாக ஆடிவந்த இவரை ஏசியன் கோப்பை தொடரின் இந்திய அணியில் இணைத்தனர் அதனால் பலரும் விமர்சிக்க தொடங்கினர். ஆனால் இவர் தான் விளையாடிய முதல் போட்டியில் வந்த இரண்டாவது நிமிடத்தில் கோல் அடித்து அனைவரின் விமர்சனத்தை தவறாக்கினார். தொடர்ந்து இப்பதிவில் ஜேஜே லால்பெக்லுவாவின் மாயாஜாலத்தை பற்றி காண்போம்.

ஜேஜே லால்பெக்லுவாவின் பயணம்

கால்பந்து குடும்ப பின்னணியை கொண்ட 28, வயதான ஜேஜே லால்பெக்லுவா தனது இளம் வயதிலே கால்பந்து பயணத்தை தொடங்கி பைலன் ஆரோஸ், மோகன் பகன், டெம்போ போன்று பல கால்பந்து அணியுடன் இணைந்து விளையாடியுள்ளார்.

பின்னர் 2011 முதல் இந்திய அணியில் இணைந்த ஜேஜே லால்பெக்லுவா இதுவரை 54 போட்டிகளில் விளையாடி 23 கோல் அடித்து அசத்தியுள்ளார். தொடர்ந்து ஹீரோ ஐஎஸ்எல்-இன் சென்னையின் எஃப்சி அணியில் இணைந்த இவர் 63 போட்டிகளில் 22 கோல் அடித்து அணியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். மேலும் இவரின் சிறப்பான ஆட்டத்தால் 2015 ஆம் ஆண்டின் ஹீரோ ஐஎஸ்எல்-இன் வளர்ந்து வரும் இளம்வீரர் விருது வழங்கி கௌரவித்தனர்.

ஜேஜே லால்பெக்லுவா மற்றும் சுனில் சேத்ரி-க்கு இடையேயான நட்புறவு   

நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி மற்றும் ஜேஜே லால்பெக்லுவா-வுக்கு இடையேயான நட்புறவு மற்றும் ஆடுகத்தில் இருவரின் ஒத்துழைப்பு இந்திய அணிக்கு தூணாக திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து சேத்ரியிடம் இருந்து பல நுட்பங்களை கற்றுவரும் ஜேஜே லால்பெக்லுவா இந்திய அணியில் சேத்ரிக்கு அடுத்ததாக 'அட்டாக்'-கிங்கில் அச்சறுத்தலாக இருந்து வருகிறார். என்றாலும் கடந்த ஆண்டு சற்று சிறப்பாக செயல்படாத ஜேஜே லால்பெக்லுவா இந்திய அணியின் ஓமன் அணிக்கு எதிரான நட்புரீதியான போட்டியிலிருந்து சுனில் சேத்ரி-யுடன் சிறப்பாக இனைந்து விளையாடிவருகிறார்.  

தாய்லாந்து அணிக்கு எதிரான இவரின் சிறப்பான ஆட்டம்

ஏசியன் கோப்பை தொடரின் குரூப் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தங்களது முதல் போட்டியில் தாய்லாந்து அணியை 4-1 கோல் கணக்கில் வீழ்த்தி, மாபெரும் வெற்றி பெற்றது. அப்போட்டியில் சுனில் சேத்ரி இரு அருமையான கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். பின்னர் தொடர்ந்து சொதப்பலாக ஆடிவந்த ஜேஜே லால்பெக்லுவா அப்போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக அருமையாக கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அடுத்து விளையாடிய யுஏஇ அணிக்கு எதிரான போட்டியிலும் இவரின் தாக்கம் சிறப்பாக இருந்து வந்தது. ஆக இவர் தனது பழைய சிறப்பான ஆட்டத்தில் திரும்பியது அணிக்கு பெரிய உதவியாக இருந்துவருகிறது.

தொடர்ந்து இவர் இந்த ஹீரோ ஐஎஸ்எல்-இல் சோபிக்க தவறினாலும் இந்திய அணியில் மற்றும் சென்னையின் எஃப்சி அணியில் இவரின் பங்களிப்பை ஒருவராலும் ஒருநாளும் மறக்கமுடியாது.

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்