இந்திய அணி யுஏஇ அணியிடம் போராடி தோல்வியை தழுவியது.

Picture courtesy: AFC Media

ஏசியன் கோப்பை தொடரின் குரூப் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி யுஏஇ அணியிடம் 2-0 கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது. 

இந்திய மக்களின் பல நாள் கனவான ஏஎஃப்சி ஏசியன் கோப்பை தொடர் ஜனவரி 05 தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரின் குரூப் 'ஏ'-வில் இடம்பெற்றுள்ள இந்திய அணி ஜனவரி 10 ஆம் தேதி யுஏஇ அணியை அபுதாபியில் உள்ள ஜாயெத் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. 

பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியின் தொடக்கத்தில் இந்திய அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது வந்தது. இதன் விளைவாக 11'வது நிமிடத்தில் இந்திய அணியின் ஆஷிக் குருணியன் கோலை நோக்கி அடிக்க அதை யுஏஇ அணியின் கோல்கீப்பர் சிறப்பாக தடுத்தார். தொடர்ந்து இந்திய அணி மீண்டும் 23'வது நிமிடத்தில் முயற்சி செய்ய அதை யுஏஇ அணியின் கோல்கீப்பர் மீண்டும் சிறப்பாக தடுத்தார். இதற்கு பிறகு ஆதிக்கம் காட்டிய யுஏஇ அணி இந்திய 'டிஃபென்டர்ஸ்'-களுக்கு அச்சறுத்தலாக காணப்பட்டு வந்தது. பின்னர் தொடர்ந்து போராடிய யுஏஇ அணி 42'வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலைக்கு சென்றது. உடனடியாக 43'வது நிமிடத்தில் சுனில் சேத்ரிக்கு வாய்ப்பு கிடைக்க அதை நூலிலையில் தவறவிட்டார். எனவே, முதல் பாதி முடிவில் யுஏஇ அணி 1-0 என முன்னிலை வகித்தது. 

அடுத்து இரண்டாவது பாதி தொடங்கிய 46'வது நிமிடத்தில் நர்சரி வெளியேற ஜேஜே லால்பெக்லுவா திரும்பினார். 53'வது நிமிடத்தில் இந்திய அணியின் ஆஷிக் குறுணியன்-க்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. பின்னர் 54'வது நிமிடத்தில் ஜேஜே லால்பெக்லுவா வந்த வேகத்தில் கோல் அடிக்க முயற்சி செய்ய பந்து கோல் போஸ்ட்-க்கு மேலாக சென்றது. தொடர்ந்து இந்திய அணி போராடிய நிலையில் 55'வது நிமிடத்தில் உதான்டா சிங் கோலை நோக்கி அடிக்க பந்து கோல் போஸ்டின் விளிம்பில் பட்டு வெளியேறியது. 71'வது நிமிடத்தில் இந்திய அணியில் அடுத்ததாக தாப்பா வெளியேற போர்கஸ் திரும்பினார். பின்னர் 73'வது நிமிடத்தில் சுபாசிஷ் போஸ்-க்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. தொடர்ந்து 79'வது நிமிடத்தில் இந்திய அணியின் அடுத்த மாற்றமாக உதான்டா வெளியேற ஜாக்கிசந்த் திரும்பினார். பின்னர் கடைசி நேரத்தில் இந்திய அணியின் சிறிய தவறால் 88'வது நிமிடத்தில் யுஏஇ அணி மேலுமொரு கோல் அடித்து வெற்றியை உறுதிசெய்தது. தொடர்ந்து ஆட்டத்தை எடுத்து செல்ல போராடிய இந்திய அணி 90+2'வது நிமிடத்தில் மீண்டும் முயற்சி செய்ய பந்து மீண்டும் கோல் போஸ்ட் விளிம்பில் பட்டு வெளியேறியது. 

ஆக, இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும் யுஏஇ அணியின் 'லாங்-பால்' பாஸை கணிக்க தவறியதால் 2-0 கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. 

அடுத்த மேட்ச் அட்டவணை

இந்திய அணி அடுத்ததாக பஹ்ரைன் அணியை ஜனவரி 14 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்கு அபுதாபியில் உள்ள அல்-ஷார்ஜா ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. 

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்