இனியுள்ள ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும் - ஜான் க்ரெகோரி

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) 2018-2019 சீசன் சிறப்பாக நடந்துவருகிறது! லீகின் ஐம்பதாவது போட்டியில் சென்னையின் எஃப்சி, மும்பை சிட்டி எஃப்சியை மும்பையில் உள்ள மும்பை கால்பந்து அரேனாவில் டிசம்பர் 06 ஆம் தேதி(வியாழக்கிழமை) எதிர்கொள்கிறது.  

மும்பை சிட்டி எஃப்சி-வுடனான போட்டிக்கு முன்பு சென்னையின் எஃப்சி-யின் தலைமை பயிற்சியாளர் ஜான் க்ரெகோரி செய்தியாளர் சந்திப்பில் - மும்பை சிட்டி எஃப்சியை பற்றி கூறியதாவது

"முன்னதாக மும்பை சிட்டி எஃப்சி டெல்லி டைனமோஸ் எஃப்சியை எதிர்கொள்கையில், முதல் பாதி முழுவதும் டெல்லி டைனமோஸ் எஃப்சி சிறப்பாக காணப்பட்டது ஆனால் எங்களை போல் நிறைய நல்ல வாய்ப்புகளை தவறவிட்டனர். பின்னர் இரண்டாவது பாதியில் மும்பை சிட்டி எஃப்சி எழுச்சி கண்டு சிறப்பாக காணப்பட்டதோடு, வெற்றியும் அடைந்தது. மேலும் மும்பை சிட்டி எஃப்சியின் 'டிஃபென்ஸ்' வலுவாக காணப்பட்டது. கோவா உடனான 5-0 என்ற படுதோல்விக்கு பிறகு ஜார்ஜ் கோஸ்டா வழிநடத்தும் மும்பை சிட்டி எஃப்சி அதிக முன்னேற்றம் அடைந்திருக்கிறது முக்கியமாக அணியின் 'டிஃபென்ஸ்' அதிக வலுவடைந்துள்ளது. அதனை கடந்து கோல் செய்வது சற்று கடினம்."

 மும்பை சிட்டி எஃப்சியின்  தலைமை பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டாவை குறித்து கூறுகையில்

"தரவரிசையில் பார்த்தால் கோஸ்டாவின் வழிநடத்துதல் எப்படி இருக்கிறது என்று தெரியும். அவர் தொடர்ந்து அணியை வெற்றி பெற உதவுகிறார். ஒரு சில நேரம் அணியின் ஃபார்மேஸன்ஸை மாற்றுகிறார் அது சரியாக செல்கிறது. எனவே, இந்த போட்டி எங்களுக்கு சவாலாக அமையும்."  

தனது அணியான சென்னையின் எஃப்சியை பற்றி அவர் கூறுகையில்

"இந்த சீசனில் நாங்கள் அந்தளவுக்கு சிறப்பாக காணப்படவில்லை. ஆனாலும் வீரர்கள் தொடர்ந்து தங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகின்றனர். கேரளாவுக்கெதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினோம், முதல் பாதியில் மூன்று கோலும் அடித்திருக்கலாம் ஆனால் வாய்ப்புகளை தவறவிட்டோம். மேலும் ஏடிகே அணிக்கெதிரான போட்டியில் ஜெயேஷ் 25மீட்டர் தூரத்திலிருந்து கோல் அடித்தார் மற்றும் இரு பெனால்டி வாய்ப்புகளையும் வழங்கினோம். எனவே, எங்களது 'பாஸிங்' மற்றும் 'பொஸெஸனை' பார்த்தால் சிறப்பாக உள்ளது ஆனால் வெற்றி பெற தவறுகிறோம். மேலும் கடந்த சீசனில் இருந்த நட்சத்திர வீரர்கள் தன்பால் கணேஷ் மற்றும் செரீனோ இல்லாதது பெரிய இழப்பாக உள்ளது" 

அணியின் ப்லே-ஆஃப்ஸ் நிலையை குறித்து அவர் கூறுகையில்

"ப்லே-ஆஃப்ஸில் நுழைய இனியுள்ள அனைத்து 8 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்றால் தான் ப்லே-ஆஃப்ஸ் வரை முன்னேற முடியும். மேலும் கால்பந்தில் முடியாது என்று ஒன்றும் கிடையாது. மேலும் புள்ளிகளை பெற தொடர்ந்து முயற்சி செய்து வருவோம். என்றாலும் கடந்த சீசன் அளவுக்கு இன்னும் நாங்கள் வரவில்லை."   

அடுத்து வரவுள்ள ஏஎஃப்சி கப் குறித்து அவர் கூறுகையில்

"ஏஎஃப்சி கப் தொடரின் மீது ஒரு கண் வைத்திருக்கிறோம். எங்களது தகுதிசுற்று மார்ச் 6 மற்றும் 13 ஆம் தேதி உள்ளது. மேலும் எந்த வெளிநாட்டு வீரரை ஒப்பந்தம் செய்வது என்று ஒரு கண் இதன் மீதும் வைத்திருக்கிறோம்."  

மேலும் அவர் தோய் சிங் குறித்து கூறுகையில்

"தோய் ஒரு சிறந்த வீரர். இந்த சீசனில் அணிக்காக சிறப்பாக காணப்பட்டு வருகிறார். பயிற்சியின் போதும் ஆடுகளத்திலும் சிறப்பாகவே விளையாடிவருகிறார். இதுவரைக்கும் 4 கோல் அடித்திருக்கிறார் ஆனால் 10 கோல் அடித்திருக்கலாம். மேலும் அவரின் பங்களிப்பை குறித்து பெருமைப்படுகிறேன்."

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்