லீஸா மங்கள்தாஸ்: வளர்ந்துவரும் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள்

ஆடுகள நிருபரான லீஸா மங்கள்தாஸ் இந்த சீசன் ஹீரோ ஐஎஸ்எல்-இல் ஆடுகளத்தில் நடைபெறும் காரசார நிகழ்வுகளை அறிவித்துவருகிறார். இவரது புதுப்புது பதிவுகளை ஒவ்வொரு வாரமும் indiansuperleague.com இணையதளத்தில் காணுங்கள். மேலும் லீஸா மங்கல்தாஸை இன்ஸ்டாக்ராம் மற்றும் ட்விட்டரில் தொடர @leezamangaldas.

இந்திய மகளிர் கால்பந்து அணி - பின்வரிசையில்: ஸ்வீடி தேவி, ஜபமணி, இந்துமதி, தங்மெய் க்ரேஸ், அஷாலதா. முன்வரிசையில்: ரடன்பாலா, தாலிமா, அதிதி, சஞ்சு, சங்கிதா 

இந்திய ஆண்கள் கால்பந்து அணியை பற்றி அனைவரும் அறிவோம் ஆனால் அதைபோல் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் அணியை பற்றி எத்தனை பேர்க்கு தெரியும்? எனவே, இந்த வாரத்தில் நாம் மகளிர் தினத்தை கொண்டவுள்ளதால் இந்த மகளிர் அணியை கௌரவிக்கும் விதமாய் அவர்களை பற்றி அறிவோம். 

கடந்த சில மாதங்களாக இந்திய மகளிர் கால்பந்து அணி அதிகளவில் முன்னேற்றத்தை கண்டுள்ளது: நவம்பர் மாதத்தில் முதல்முறையாக ஒலிம்பிக் தகுதிச்சுற்றின் முதல் சுற்றை நிறைவு செய்தது. பின்னர் ஜனவரி மாதத்தில் ஹாங்காங் மற்றும் இந்தோனேஷியா நாட்டில் நட்புரீதியாக விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றது. பின்னர் கடந்த வாரத்தில் துருக்கிய கோப்பை தொடரில் துர்க்மெனிஸ்தான் அணியை 10-0 கோல் கணக்கில் வீழ்த்தியது. மேலும் அணி தற்போது புது பெண் பயிற்சியாளர் மேமோல் ராக்கியை நியமித்துள்ளது. இத்தகைய வளர்ந்து வரும் இந்திய மகளிர் அணியில் அனைவரின் வயது சராசரியாக 21 வயதுக்குட்பட்டதாக இருக்கிறது.  

எனவே, இப்பதிவில் வளர்ந்துவரும் 5 இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகளை பற்றி காண்போம் 

இந்துமதி கதிரேசன் ஆடுகளத்தில் 

இந்துமதி கதிரேசன் 

தமிழ்நாட்டை சேர்ந்த இந்துமதி கதிரேசன் மீனவ குடும்ப பின்னணியை கொண்டவர் ஆவார். 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவின் போது தனது குடும்பத்தை இழந்த இவர் அந்த பேரழிவில் தங்களது குடும்பத்தை இழந்த மற்ற இரண்டு பெண்களுடன் சேர்ந்து தமிழ்நாடு மகளிர் அணிக்காக விளையாடி வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்

"நங்கள் சுனாமி பேரழிவில் அனைத்தையும் இழந்தோம். ஆனால் கால்பந்து எங்களது வாழ்க்கையில் ஒரு புதிய பாதையை தந்தது." 

இந்திய அணியில் சிறப்பாக விளையாடிவந்த இந்துமதி துர்க்மெனிஸ்தான்-க்கு எதிரான போட்டியில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.   

சஞ்சு யாதவ் ஆடுகளத்தில் 

சஞ்சு யாதவ்

ஹரியானாவில் உள்ள அலாக்புராவை சேர்ந்த இவர் ஒரு எளிமயான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த மாநிலத்தில் இருந்து பல விளையாட்டு வீரர்கள் வளர்ந்து வந்தாலும் பெண்களை அந்தளவுக்கு விளையாட்டு துறையில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஆனால் சஞ்சு யாதவ் இத்தகைய சவால்களை கடந்து இன்று பல மகளிர் கால்பந்து பிரியர்களுக்கு முன்மாதிரியாக உள்ளார். இவர் தனது கல்வி உதவித்தொகைக்காகவும் மற்றும் வீட்டு பண தேவைக்காகவும் 10 வயதிலே கால்பந்து பயணத்தை தொடங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில்

"எனது கடின உழைப்புகள் என்னை ஒரு நல்ல வீராங்கனையாக உருவாக்கியுள்ளது இது எனது உடல் மற்றும் மன வலிமையை ஆடுகளத்தில் மட்டுமல்லாது வெளியிலும் பலப்படுத்தியுள்ளது." 

இவர் கடந்த வாரம் துர்க்மெனிஸ்தான்-க்கு எதிரான போட்டியில் ஹாட்-ட்ரிக் கோல் செய்து அசத்தினார். 

தங்மெய் க்ரேஸ் ஆடுகளத்தில் 

தங்மெய் க்ரேஸ் 

மணிப்பூரை சேர்ந்த 23, வயதான தங்மெய் க்ரேஸின் தந்தை ஓர் சபை போதகர் ஆவார். மணிப்பூர் மாநிலத்தில் பொதுவாகவே அதிகளவிலான கால்பந்து பிரியர்கள் உள்ளனர். அத்தகைய பின்னணியை கொண்டு வளர்ந்து வந்து தற்போது இந்திய அணியில் விளையாடிவரும் இவர் தற்போது பங்கேற்ற நட்புரீதியான போட்டியில் முக்கியமான 3 கோல் செய்து அசத்தினார். மேலும் இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியன் மகளிர் லீக் தொடரில் வளர்ந்துவரும் வீராங்கனை விருதை தட்டிசென்றார். இதுகுறித்து அவர் கூறுகையில்

"நான் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதெல்லாம் பக்கத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் சென்று விளையாடுவேன். யாரும் இல்லை என்றாலும் தனியாக ஓடி விளையாடுவேன். எனது கிராமத்தில் தொடர்ந்து பெண்கள் கால்பந்து விளையாடுவதை ஊக்குவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் தான் இந்தளவுக்கு நான் உயர உறுதுணையாக இருந்தனர்."  

தலிமா சிபர் மற்றும் ஜபமணி துடு 

தலிமா சிபர்

டெல்லியை சேர்ந்த 21, வயதான தலிமா சிபர் ரைட் பேக், சென்டர் பேக் மற்றும் சென்ட்ரல் மிட்ஃபீல்டராக விளையாடகூடிய திறன் உடையவர் ஆவார். விளையாட்டு குடும்ப பின்னணியை கொண்ட இவர் டெல்லி டைனமோஸ் அணியின் தீவிர ரசிகை ஆவார். இவர் சிறுவயது முதலே தனது தந்தையிடம் பயிற்சி பெற்று இந்திய ரஷ் கால்பந்து அணி மற்றும் எஃப்சி புனே சிட்டி-க்காக இந்தியன் மகளிர் லீகில் விளையாடி பின்னர் இந்திய யு-14, யு-16 மற்றும் யு-19 அணிக்கென விளையாடி இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்துள்ளார். தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்டு வரும் கால்பந்து வளர்ச்சியை குறித்து அவர் கூறுகையில்

"கிரிக்கெட் சிறப்பாக வளர்ந்துள்ள நிலையில் தொடர்ந்து கால்பந்து வளர்ந்து வருகிறது. தற்போது ஆண்கள் கால்பந்து அணி அங்கீகாரம் பெற்றுள்ளது. ஆனால் மகளிர் துறையில் வளர சற்று நேரமாகும். தொடர்ந்து அதிகளவிலான பெண்கள் கால்பந்தை தங்களது வாழ்க்கையாக எடுத்து வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்." 

சிரிப்பு மழையில் ஜபமணி துடு 

ஜபமணி துடு

ஒடிசா-வில் உள்ள 18, வயதான ஜபமணி துடு இந்திய ஆடும் XI வீரர்களில் இடம்பெற்று கேப்டனாகவும் செயல்பட்டு இளம்வயதிலேயே சாதித்துள்ளார். சிறுவயதில் அவரது குடும்பத்தினர் கால்பந்து விளையாடுவதை எதிர்த்துவந்தனர் ஆனால் அவர் பக்கத்து வீட்டில் உள்ள சிறுவர்களிடம் சேர்ந்து கால்பந்து விளையாடி பின்னர் மாநில குடியிருப்பு அகாடமியில் தேர்வான பிறகு அவரது குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர். 

16, வயதில் இந்திய அணியில் இடம்பிடித்த இவர் தொடர்ந்து அணியில் முக்கிய பங்குவகித்து வருகிறார். இவர் மாநில அணியில் ஃபார்வர்டு வீராங்கனையாகவும் மற்றும் தேசிய அணியில் லெஃப்ட் பேக் வீராங்கனையாகவும் விளையாடி வருவார். இவர் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் மகளிர் லீகில் வளர்ந்துவரும் வரும் வீராங்கனை விருதை தட்டிசென்றார்.   

தேசிய கொடியுடன் இந்திய மகளிர் அணி 

இந்தியாவில் பொறுத்தவரை மகளிர் கால்பந்து வளர சற்று கடினம் தான் என்றாலும் அதற்கு நேரம் தேவை. இத்தகைய வளர்ந்துவரும் இளம்கால்பந்து வீராங்கனைகள் பற்றி அறிந்த நாம் அவர்களது இந்த பயணத்தில் தொடர்ந்து ஊக்குவிக்க கடமைபட்டிருக்கிறோம். 

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்