AFC ப்லே-ஆஃப்: சென்னையின் எஃப்சி,கொழும்பு எஃப்சி சந்தித்த முதல் லெக் ஆட்டம் சமனில் முடிந்தது

கொழும்புவில் உள்ள கொழும்பு ரேஸ் கோர்ஸ் ஆடுகளத்தில் நடைபெற்ற AFC ப்லே-ஆஃப் தகுதிச்சுற்றின், சென்னையின் எஃப்சி மற்றும் கொழும்பு எஃப்சி-க்கிடையே நடந்த முதல் லெக் போட்டி கோல் ஏதும் இல்லாமல் சமனில் முடிந்தது. 

ஆட்டத்தை பற்றின முழுமையான விளக்கம்

இப்போட்டிக்கான சென்னையின் எஃப்சி அணியில் இரு மாற்றங்கள் ஏற்பட ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் தொடக்க முதலே இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வர அதிகளவிலான வாய்ப்புகளை உருவாக்க தவறிவந்தனர். பின்னர் 7'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் ஃப்ரான்சிஸ்கோ கோலை நோக்கி அடிக்க பந்து கோல் போஸ்டிற்கு வெளியே சென்றது. அடுத்து 21'வது நிமிடத்தில் அகஸ்டோ டோன்டோன்போ-வுக்கு பாஸ் செய்து ஒரு வாய்ப்பு உருவாக்க, அதை கோலாக மாற்ற தவறினர். பின்னர் 35'வது நிமிடத்தில் ஐசக் கிராஸ் செய்து மேலுமொரு வாய்ப்பை உருவாக்க அதை கொழும்பு அணியின் கோல்கீப்பர் அருமையாக தடுத்தார். தொடர்ந்து சென்னையின் எஃப்சி பிடியில் பந்து அதிகபட்சமாக இருந்துவர, நல்ல வாய்ப்புகளை உருவாக்க திணறிவந்தனர். எனவே, முதல் பாதி ஆட்டம் கோல் ஏதும் இல்லாமல் சமனில் இருந்தது. 

பின்னர் இரண்டாவது பாதியில் கொழும்பு அணி முதல் பாதியை விட சிறப்பாக செய்லபட தொடர்ந்து சென்னையின் டிஃபென்டர்ஸ்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவந்தது. 47'வது மற்றும் 52'வது நிமிடத்தில் மெயில்சன் கொழும்பு அணியின் இரு வாய்ப்புகளை அபாரமாக தடுத்தார். பின்னர் 73'வது நிமிடத்தில் சென்னையின் அணியில் ஐசக் வெளியேற தோய் சிங் திரும்பினார். அடுத்து 75'வது நிமிடத்தில் ஃப்ரான்சிஸ்கோ வெளியேற வினீத் திரும்பினார். தொடர்ந்து ஆட்டம் செல்ல இரு அணிகளும் வாய்ப்புகளை கோலாக மாற்ற தவறிவந்தனர். கடைசியாக 90'வது நிமிடத்தில் ஜேஜே வெளியேற ரஃபி திரும்பினார். எனவே, இரண்டாவது பாதியில் சென்னையின் எஃப்சி-யின் டிஃபென்டர்ஸ்கள் சிறப்பாக செயல்பட்டு கொழும்பு அணியின் அனைத்து முயற்சிகளையும் தடுக்க, ஆட்டம் கோல் ஏதும் இல்லாமல் சமனில் முடிந்தது. 

அடுத்து முக்கியமான இரண்டாவது லெக் ஆட்டம் மார்ச் 13 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள அரேனா பை ட்ரான்ஸ்டேடியா-வில் நடைபெறும்.   

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்