சென்னையின் அணி - ஒரு அலசல்

ஹீரோ ஐஎஸ்எல்லில் இரு முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னையின் எஃப்ஸி அணிக்கு கடந்த சீசன் மிகமோசமானதாக அமைந்தது. 18 போட்டிகளில் 9 புள்ளிகளை மட்டுமே ஈட்டி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆட்டம் என இரு பிரிவுகளிலும் சென்னையின் அணியின் புள்ளிவிவரங்கள் கவலைக்குரியதாகவே அமைந்தன.
இதனால் வரும் சீசனில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.
புதிய சீசன் தொடங்கவுள்ள நிலையில் சென்னையின் அணி குறித்த ஒரு அலசல்

அணிக்குள் வந்தவர்களும் வெளியேறியவர்களும்

நல்ல அணியை உருவாக்க சிறப்பான இடமாற்ற நடைமுறையை சென்னை அணி உருவாக்கியுள்ளது. எஃப்ஸி புனே சிட்டி அணியின் முன்னாள் கோல்கீப்பர் விஷால் கெய்த் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தற்போதுள்ள கரன்ஜித் சிங்குக்கு மாற்றாக களம் இறக்கப்பட வாய்ப்புள்ளது. தற்காப்பு பிரிவில் கேப்டன் மெய்ல்சன் ஆல்விஸை இழந்திருந்தாலும் அனுபவமும் திறமையும்  வாய்ந்த மும்பை எஃப்ஸி அணியின் லூசியன் கோவன் மற்றும் ஆஃப்கன் சென்டர் பேக் மாசி சய்கனி ஆகியோரை சேர்த்துள்ளது. பிரேசிலிய தற்காப்பு வீரர் எலி சபியா தக்கவைக்கப்பட்டுள்ளார். எட்வின் வன்ஸ்பால் சேர்க்கப்பட்டுள்ளதால் அவரை பின்களத்திலோ அல்லது நடுக்களத்திலோ ஆட வைக்க முடியும்.
ஆண்ட்ரே ஷெம்ப்ரி, டிராகோஸ் ஃபிர்டுலெஸ்கு, ரஃபால் கிரிவல்லரோ, நெர்ஜியஸ் வல்ஸ்கிஸ் ஆகியோரும் சென்னையின் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்நால்வரும் புதிதாக வந்துள்ள லாலியன்ஜுவாலா சாங்தே உடன் சேர்ந்து ஆடும் போது அது எதிரணியினருக்கு நிச்சயம் அச்சுறுத்தலாக இருக்கும். அணியை விட்டு வெளியேறிய ரஃபால் அகஸ்டோ, ஐசக் வன்மல்ஸ்வாமா ஆகியோருக்கு இவர்கள் பொருத்தமான மாற்றாக இருப்பர்.

பயிற்சியாளரைப் பற்றி...

கடந்த சீசனில் மோசமான தோல்வியை கண்டாலும் பயிற்சியாளர் கிரிகோரியை இந்த சீசனுக்கும் சென்னையின் அணி தக்க வைத்துள்ளது.
2017-18 சீசனில் சென்னையின் அணி மகுடம் சூட பயிற்சியாளர் கிரிகோரி முக்கிய காரணமாக இருந்தார். தற்போது புதிய வீரர்களுடன் புத்துணர்ச்சியுடன் 65 வயதான கிரிகோரி புதிய சவாலுக்கு தயாராகிறார்.இழந்த பெருமையை மீட்பதே இவரது முக்கியப் பணி.

அணியின் பலங்கள்

அனுபவமும் திறமையும் குறிப்பாக பின் களத்தில் வலிமை வாய்ந்த வீரர்களை கொண்டிருப்பது சென்னையின் அணியின் பெரிய பலம். கோயன், சய்கனி, எலி சபியா ஆகியோர் சென்டர் பேக்கில் அசத்துவார்கள். பயிற்சியாளரின் தேவைக்கேற்ப இவர்கள் தங்கள் ஆட்டத்தை சரிசெய்துகொள்வர். நடுக்கள வீரர் தனபால் கணேஷ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது நல்ல செய்தி. இவர் கடந்த சீசனில் முழங்கால் காயம் காரணமாக ஆடாமல் இருந்தார்.

தாக்குதல் பிரிவில் முற்றிலும் புதிய வீரர்கள் இடம் பெற்றிருப்பது இந்த சீசனில் எதிராளிகளுக்கு அச்சத்தை கூட்டும். ஷெம்ப்ரி, ஃபிர்டுலெஸ்கு, வல்ஸ்கிஸ் ஆகியோர் முதல் முறையாக ஐஎஸ்எல்லில் ஆட உள்ளனர். இதனால் ஆட்டங்களை கணிப்பது கடினமாகும். புது வரவுகளான சாங்தே, தோய் சிங் ஆகியோரும் அணியின் வேகத்தை கூட்டுவார்கள். நடுக்களத்தில் அனிருத் தாப்பா கைகொடுப்பார்.

கவலைக்குரியவை

ஜிஜி லால்பெக்குலா 2014ல் இருந்து அணியில் இருந்துவருகிறார். இவர்தான் கிளப்பில் அதிக கோல் அடித்தவரும் கூட. ஆனால் கடந்த சீசனில் இவர் ஒரு கோல் மட்டுமே அடித்தார். காயத்திலிருந்து இவர் முழுமையாக மீளவில்லை. இது கவலை தரும் அம்சம். எனினும் இந்த சீசனில் ஜிஜி அணிக்கு உதவிகரமாக இருப்பார் என நம்பலாம்.

கோல்கீப்பர்கள்: கரன்ஜித் சிங், விஷால் கெய்த், சன்ஜிபன் கோஷ்

தற்காப்பு வீரர்கள்: காஸ்பம் தொன்டோன்பா சிங், மாசி சய்கனி, லூசியன் கோயன், எலி சபியா ஃபிலோ, ஜெர்ரி லால்ரின்ஜுவாலா, தீபக் தாங்ரி,  சோங்கோம்பிபா ரீம்சோசுங் அய்மோல் ஜோமிங்லியானா ரால்டே, லால்தின்லியானா, ஹென்றி ஆன்ட்டனி.

நடுக்கள வீரர்கள்

லாலியன்ஜுவாலா சாங்தே, எட்வின் சிட்னி வன்ஸ்பால், டிராகோஸ் ஃபிர்டுலெஸ்கு, காஞ்சன்பம் தோய் சிங், அனிருத் தாப்பா, தனபால் கணேஷ், கெர்மன்பிரீத் சிங், ரஃபால் ஷூலர் கிரிவல்லரோ

முன்கள வீரர்கள்

நெர்ஜியஸ் வல்ஸ்கிஸ், ஜிஜி லால்பெக்குலா, ரஹிம் அலி, ஆண்ட்ரே ஷெம்ப்ரி

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்