பெங்களூரு எஃப்சி-யை வீழ்த்தி, சென்னையின் எஃப்சி சொந்த மண்ணில் முதல் வெற்றி பெற்றது

சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்)-இன் எழுபத்தி மூன்றாவது போட்டியில் போட்டியில் சென்னையின் எஃப்சி 2-1 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி-யை வீழ்த்தியது. இதன்மூலம் சென்னையின் எஃப்சி இத்தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

இப்போட்டியில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள்

  • 15'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் ஜோமிங்லியானா ரால்டே காயத்தால் வெளியேறினார்.
  • 32'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் ஜேஜே லால்பெக்லுவா இந்த சீசனில் தனது முதல் கோல் அடித்தார்.
  • 43'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் க்ரெகோரி நெல்சன் கோல் அடித்து அணியை 2-0 என முன்னிலைப்படுத்தினார்.
  • 57'வது நிமிடத்தில் பெங்களூரு எஃப்சி-யின் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார்

ஆட்டத்தை பற்றின முழுமையான விளக்கம்

இப்போட்டிக்கான சென்னையின் எஃப்சி அணியில் புதிய ஒப்பந்தமான கிறிஸ் ஹெர்ட் இடம்பெற ஜேஜே லால்பெக்லுவா கேப்டனாக செயல்பட்டார். பின்னர் ஆட்டம் தொடங்க, 2'வது நிமிடத்தில் பெங்களூரு எஃப்சி-யின் சிஸ்கோ கோலை நோக்கி அடிக்க அதை சென்னையின் எஃப்சி-யின் கோல்கீப்பர் கரஞ்சித் சிங் அருமையாக தடுத்தார். தொடர்ந்து பெங்களூரு எஃப்சி-யின் மிக்கு தொடர்ச்சியாக சென்னையின் அணிக்கு அச்சுறுத்தலாக இருந்துவர அடுத்தடுத்து கோல் அடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவந்தார். பின்னர் 15'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் ஜோமிங்லியானா ரால்டே காயத்தால் வெளியேற 19'வது நிமிடத்தில் அனிருதா தாப்பா திரும்பினார். தொடர்ந்து இரு அணிகளும் முதல் கோல் அடிக்க போராடி வர 32'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் ஜேஜே லால்பெக்லுவா அருமையாக கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தியதோடு இந்த சீசனில் தனது கோலை பதிவு செய்தார். தொடர்ச்சியாக சென்னையின் அணி முயற்சி செய்து வர 43'வது நிமிடத்தில் லால்தின்லியானா 'பாஸ்' செய்த பந்தை க்ரெகோரி நெல்சன் தலையால் முட்டி கோல் அடித்து அணியை 2-0 முன்னிலைப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வர, சென்னையின் எஃப்சி 2-0 கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

அடுத்து இரண்டாவது பாதி தொடங்க 48'வது நிமிடத்தில் பெங்களூரு எஃப்சி-யின் லூயிஸ் லோபேஸ்-க்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. பின்னர் தொடர்ந்து பெங்களூரு எஃப்சி முதல் கோல் அடிக்க முயற்சி செய்ய 57'வது நிமிடத்தில் பெங்களூரு எஃப்சி-யின் சிஸ்கோ 'பாஸ்' செய்த பந்தை சுனில் சேத்ரி அருமையாக தலையால் முட்டி கோல் அடித்து ஆட்டத்தை 2-1 என எடுத்து சென்றார். அடுத்து 65'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் க்ரெகோரி நெல்சன்-க்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. பின்னர் 65'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் சிகே வினீத் வெளியேற தோய் சிங் திரும்பினார். தொடர்ந்து பெங்களூரு எஃப்சி ஆட்டத்தை சமன் செய்ய போராடி வர, எடுத்த அனைத்து முயற்சிகளையும் சென்னையின் எஃப்சி-யின் டிஃபென்டர்ஸ்கள் தடுத்து வந்தனர். பின்னர் சென்னையின் அணியின் கடைசி மாற்றமாக 90+2'வது நிமிடத்தில் ஜேஜே லால்பெக்லுவா வெளியேற முஹமது ரஃபி திரும்பினார்.

எனவே, முதல் பாதியில் சென்னையின் அணி வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தால் 2-1 கோல் கணக்கில் பலம் வாய்ந்த பெங்களூரு எஃப்சி-யை வீழ்த்தி சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

விருது நிகழ்வுகள்

இன்றைய க்ளப் விருது - சென்னையின் எஃப்சி.
ஆட்டத்தின் ஸ்விஃப்ட் லிமிட்லெஸ் விருது - க்ரெகோரி நெல்சன்.
ஆட்டத்தின் டிஎச்எல் வின்னிங் பாஸ் விருது - லால்தின்லியானா ரென்த்லெய்.
ஐஎஸ்எல் வளர்ந்துவரும் வீரர் - லால்தின்லியானா ரென்த்லெய்.
ஆட்டநாயகன் விருது - ரஃபேல் அகஸ்டோ.

அடுத்த மேட்ச் அட்டவணை

சென்னையின் எஃப்சி அடுத்து கேரளா ப்லாஸ்டர்ஸ் எஃப்சி-யை பிப்ரவரி 15 ஆம் தேதி கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. மறுபுறம் பெங்களூரு எஃப்சி அடுத்து டெல்லி டைனமோஸ் எஃப்சி-யை பிப்ரவரி 17 ஆம் தேதி நியூ டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.

இங்கே போட்டி சிறப்பம்சங்கள் பார்க்கவும்:

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்