AFC குரூப் சுற்று ஆட்டத்தில் முதல் வெற்றியை பெற்றது சென்னையின் எஃப்சி

அஹமதாபாத்தில் உள்ள அரேனா பை ட்ரான்ஸ்டேடியா-வில் நடைபெற்ற AFC தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி 2-0 கோல் கணக்கில் நேபால் நாட்டை சேர்ந்த மனங் மார்ஷ்யங்டி அணியை வீழ்த்தி இச்சுசுற்றின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் சென்னையின் எஃப்சி குரூப் 'இ' தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியது. 

இப்போட்டியில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள்

  • 51'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் கிறிஸ் ஹெர்ட் முதல் கோல் அடித்தார்.
  • 53'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் மெயில்சன் அணியின் இரண்டாவது கோல் அடித்தார். 

ஆட்டத்தை பற்றின முழுமையான விளக்கம்

ஆட்டத்தின் 5'வது நிமிடத்தில் ஜேஜே லால்பெக்லுவா கோலை நோக்கி அடிக்க பந்து சற்றே கோல் போஸ்டிற்கு மேலாக சென்றது தொடர்ந்து சென்னையின் அணி ஆட்டத்தில் இதைப்போல் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வர மனங் மார்ஷ்யங்டி அணி சற்று தடுமாறி வந்தது. தொடர்ந்து ஆட்டம் செல்ல 36'வது நிமிடத்தில் சென்னையின் அணி ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டது. இதன்பின்னர் முதல் பாதி நெருங்கி வர மனங் மார்ஷ்யங்டி அணி அடுத்தடுத்து இருமுறை கோல் அடிக்க முயற்சி செய்ய அதை மெயில்சன் அருமையாக தடுத்தார். இதனைத்தொடர்ந்து முதல் பாதி நிறைவு பெற ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் இருந்தது. 

பின்னர் இரண்டாவது பாதி தொடங்க 51'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் கிறிஸ் ஹெர்ட் முதல் கோல் அடித்து அணியை 1-0 முன்னிலைப்படுத்தினார். அடுத்து உடனடியாக 53'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் கேப்டன் மெயில்சன் தலையால் முட்டி கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். தொடர்ந்து ஆட்டம் செல்ல மனங் மார்ஷ்யங்டி அணி முதல் கோல் அடிக்க போராடி வந்தது ஆனால் சென்னையின் அணியினர் அனைத்து முயற்சிகளையும் தடுத்தனர். பின்னர் ஆட்டத்தின் கடைசி நேரமான 87'வது நிமிடத்தில் கோல்கீப்பர் கரஞ்சித் சிங் எதிரணியின் வாய்ப்பை அருமையாக தடுத்தார். இதனைத்தொடர்ந்து ஆட்டம் நிறைவு பெற சென்னையின் எஃப்சி 2-0 கோல் கணக்கில் மனங் மார்ஷ்யங்டி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் சென்னையின் எஃப்சி AFC தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியது.. 

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்