முதல் வெற்றியை நோக்கி சென்னையின் எஃப்சி, மனங் மார்ஷ்யங்டி அணியை சந்திக்கிறது

சென்னையின் எஃப்சி AFC தொடரின் குரூப் ஸ்டேஜ் சுற்றின் இரண்டாவது போட்டியில் ஹோம் லெக் அடிப்படையில் நேபால் லீக் சாம்பியனான மனங் மார்ஷ்யங்டி கிளப்-பை ஏப்ரல் 17 ஆம் தேதி(புதன்கிழமை) அஹமதாபாத்தில் உள்ள அரேனா பை ட்ரான்ஸ்டேடியா-வில் இரவு 7:30 மணிக்கு எதிர்கொள்கிறது. முன்னதாக குரூப் 'இ' பிரிவு தரவரிசையில் சென்னையின் எஃப்சி அணி இரண்டாவது இடத்திலும் மனங் மார்ஷ்யங்டி அணி நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சென்னையின் எஃப்சி

முதல்முறையாக AFC குரூப் ஸ்டேஜ் சுற்றுக்கு முன்னேறிய சென்னையின் எஃப்சி அணி தங்களது முதல் போட்டியில் மினர்வா பஞ்சாப்-பிடம் கோல் ஏதுமின்றி சமனில் நிறைவு செய்தது. எனவே, இப்போட்டியை வென்று தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் சென்னையின் எஃப்சி திகழ்கிறது. 

சென்னையின் எஃப்சி இந்த சீசன் ஐஎஸ்எல் தொடரில் சோபிக்க தவறினாலும் அதன்பின்னர் பங்கேற்ற ஹீரோ சூப்பர் கோப்பையில் செய்த தவறுகளை சரி செய்து மும்பை சிட்டி எஃப்சி, நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, ஏடிகே போன்று பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி அசத்தியது. ஆனால் இறுதிப்போட்டியில் போராடி கோவா-விடம் 2-1 கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. என்றாலும் அத்தொடரில் அணியின் ஆட்டத்தில் அதிகளவில் முன்னேற்றம் இருந்து வந்தது. 

சென்னையின் எஃப்சி-யை பொறுத்தவரை தமிழக வீரர் தன்பால் கணேஷ் நீண்ட இடைவேளைக்கு பிறகு அணியில் திரும்பியது அணிக்கு பலமாக உள்ளது. மேலும் நடந்து முடிந்த சூப்பர் கோப்பை தொடரில் தாப்பா மற்றும் சிகே வினீத் எதிரணிக்கு அச்சுறுத்தலாக திகழ்ந்து இரு கோல் அடித்து அசத்தினர். இவர்களோடு சேர்ந்து மெயில்சன் டிஃபென்ஸில் தூணாக திகழ்ந்து வந்தார். தொடர்ந்து இப்போட்டியிலும் இவர்கள் தங்களது தாக்கத்தை தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மனங் மார்ஷ்யங்டி 

சென்னையின் எஃப்சி-யை போல் முதல் முறையாக AFC கோப்பை தொடரில் பங்கேற்ற மனங் மார்ஷ்யங்டி அணி தங்களது முதல் போட்டியில் வங்கதேச அணியான அபாஹானி லிமிடெட் தாக்கா-விடம் 1-0 கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. எனவே, இப்போட்டி மூலம் சருக்கலாக தொடங்கிய தங்களது AFC கோப்பை பயணத்தை சிறப்பாக மாற்ற முனைப்புடன் திகழ்கிறது. 

நேபால் நாட்டில் இருந்து பங்கேற்கும் முதல் அணியான மனங் மார்ஷ்யங்டி அணி 2018-19 நேபால் 'ஏ' டிவிஷன் தொடரை வென்று AFC குரூப் ஸ்டேஜ் சுற்றுக்கு முன்னேறியது. இதுமட்டுமல்லாது அணி எட்டு தேசிய அளவிலான தொடரையும் வென்றதோடு சமீபத்தில் சிக்கிம் கோல்டு கோப்பையை-யும் வென்றுள்ளது.

மனங் மார்ஷ்யங்டி அணியை பொறுத்தவரை ஹேமன் குருங், ஆசிஃப் போன்று பல இளம்வீரர்கள் உள்ளனர். மேலும் பிஷால் ராய் மற்றும் அஞ்சன் பிஸ்டா எதிரணிக்கு சவாலாக திகழ்வதோடு சாஹீத், ஓலாவாலே ஓலாடிபே மற்றும் அடெலஜா அணியில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். 

ஆடும் Xl வாய்ப்புள்ள வீரர்கள்

சென்னையின் எஃப்சி

கரஞ்சித் சிங், மெயில்சன் ஆல்வெஸ், டோன்டோன்போ சிங், எலி சபியா, லால்தின்லியானா ரென்த்லெய், கிறிஸ் ஹெர்ட், தாப்பா, ரஃபேல் அகஸ்டோ, ஐசக், சிகே வினீத், ஜேஜே லால்பெக்லுவா.

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்