கொழும்பு எஃப்சி-யை வீழ்த்தி, சென்னையின் எஃப்சி AFC கோப்பையின் குரூப் ஸ்டேஜ் போட்டிக்கு முன்னேறியது

அஹமதாபாத்தில் உள்ள அரேனா பை ட்ரான்ஸ்டேடியா-வில் நடைபெற்ற AFC ப்லே-ஆஃப் தகுதிச்சுற்றின் இரண்டாவது லெக் போட்டியில் சென்னையின் எஃப்சி 1-0 கோல் கணக்கில் கொழும்பு எஃப்சி-யை வீழ்த்தியது. முன்னதாக முதல் லெக் ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்ததால் இப்போட்டியின் வெற்றி மூலம் சென்னையின் எஃப்சி AFC கோப்பையின் குரூப் ஸ்டேஜ் போட்டிக்கு  முன்னேறியது. இதன்மூலம் சென்னையின் எஃப்சி AFC தொடரின் குரூப் ஸ்டேஜ்-க்கு முன்னேறிய முதல் ஐஎஸ்எல் அணி என்ற பெருமையை பெற்றது.

இப்போட்டியில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள்

  • 68'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் ஜேஜே லால்பெக்லுவா முதல் கோல் அடித்தார்.

 ஆட்டத்தை பற்றின முழுமையான விளக்கம்

3 மாற்றங்களுடன் சென்னையின் எஃப்சி ஆட்டத்தை தொடங்க தொடக்க முதலே சிறப்பாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. இதன்விளைவாக 14'வது நிமிடத்தில் தோய் சிங் அருமையாக கிராஸ் செய்து உருவாக்கின ஒரு நல்ல வாய்ப்பை ஐசக் கோலாக மாற்ற தவறினார். மீண்டும் சென்னையின் அணிக்கு 19'வது நிமிடத்தில் லால்தின்லியானா மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்க அதை ஜேஜே லால்பெக்லுவா நூலிழையில் தவறவிட்டார். இதன்பின்னர் கொழும்பு எஃப்சி சற்று ஆதிக்கம் செலுத்த 23'வது நிமிடத்தில் கொழும்பு அணியின் ஐசக் கோலை நோக்கி அடிக்க அதை கரஞ்சித் சிங் அருமையாக தடுத்தார். மீண்டும் 33'வது நிமிடத்தில் கொழும்பு எஃப்சி கிடைத்த கார்னர் வாய்ப்பை கோலை நோக்கி அடிக்க அதை சென்னையின் அணியின் கரஞ்சித் சிங் அபாரமாக தடுத்தார். தொடர்ந்து ஆட்டம் செல்ல முதல் பாதி முடிவுக்கு வந்தது. எனவே, முதல் பாதி முடிவில் ஆட்டம் கோல் ஏதும் இல்லாமல் சமனில் இருந்தது. 

அடுத்து இரண்டாவது பாதியிலும் சென்னையின் எஃப்சி அதிகபட்சமாய் ஆதிக்கம் செலுத்திவர தொடர்ந்து கொழும்பு எஃப்சியின் டிஃபென்டர்ஸ்களை அச்சுறுத்தி வந்தது. பின்னர் 67'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சியின் தோய் சிங் வெளியேற தாப்பா திரும்பினார். இதனைத்தொடர்ந்து உடனடியாக 68'வது நிமிடத்தில் அடுத்தடுத்து வாய்ப்புகளை தவறிவந்த ஜேஜே லால்பெக்லுவா கொழும்பு எஃப்சி-யின் சிறிய தவறை பயன்படுத்தி அருமையாக கோல் அடித்து சென்னையின் எஃப்சி-யை 1-0 கோல் கணக்கில் முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து முதல் கோல் அடிக்க போராடி வந்த கொழும்பு எஃப்சி 70'வது நிமிடத்தில் இருமுறை அடுத்தடுத்து முயற்சி செய்ய அதை கரஞ்சித் சிங் அருமையாக தடுத்தார். பின்னர் இரண்டாவது கோல் அடிக்கும் முனைப்புடன் காணப்பட்ட சென்னையின் எஃப்சி-யினர் ஒரு சில நல்ல வாய்ப்புகளை தவறவிட்டனர். தொடர்ந்து ஆட்டம் செல்ல இரண்டாவது பாதி முடிவுக்கு வர 86'வது நிமிடத்தில் சென்னையின் அணியின் வினீத் வெளியேற ஜெர்மன்ப்ரீத் திரும்பினார். தொடர்ந்து கொழும்பு எஃப்சி ஆட்டத்தை சமன் செய்ய முயற்சி செய்து வர அதை சென்னையின் எஃப்சி-யின் டிஃபென்டர்ஸ்கள் சிறப்பாக தடுத்துவந்தனர். எனவே, சென்னையின் எஃப்சி அதிகப்படியான வாய்ப்புகளை தவறினாலும் ஜேஜே லால்பெக்லுவா அடித்த ஒரு கோல் அணி 1-0 கோல் கணக்கில் கொழும்பு எஃப்சி-யை வீழ்த்தி AFC கோப்பையின் குரூப் ஸ்டேஜ் போட்டிக்கு முன்னேறியது.  

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்