சென்னையின் எஃப்சி மீண்டும் வாய்ப்புகளை தவறவிட, மேலுமொரு தோல்வியை தழுவியது.

கால்பந்து திருவிழாவான இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸஎல்)-இன் ஐம்பதாவது போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 2-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி-யை வீழ்த்தியது. 

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) 2018-2019 சீசன் சிறப்பாக நடந்துவருகிறது! லீகின் ஐம்பதாவது போட்டியில் சென்னையின் எஃப்சி, மும்பை சிட்டி எஃப்சியை மும்பையில் உள்ள மும்பை கால்பந்து அரேனாவில் எதிர்கொண்டது. 

தொடக்க முதலே இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அடுத்தடுத்து கோல் அடிக்க முயற்சி செய்து வந்தனர் என்றாலும் மும்பை சிட்டியின் ஆதிக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. எனவே, அதன் விளைவாக 27'வது நிமிடத்தில் மும்பை சிட்டி எஃப்சியின் பாஸ்டோஸ் 'பாஸ்' செய்த பந்தை ரேய்னியர் ஃபெர்னான்டஸ் அருமையாக கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். பின்னர் சென்னையின் அணி சற்று போராடி வந்த நிலையில் 32'வது நிமிடத்தில் அகஸ்டோ அபாரமாக 'பாஸ்' செய்த பந்தை சாலோம் கோல் அடிக்க முயற்சி செய்தார் ஆனால் அதை மும்பை சிட்டியின் கோல்கீப்பர் அம்ரிந்தர் சிங் சிறப்பாக தடுத்தார். தொடர்ந்து சென்னையின் அணி முயற்சி செய்து வந்த நிலையில் 45'வது நிமிடத்தில் அகஸ்டோ மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கினார் ஆனால் தோய் சிங் அதை சற்றே தவறவிட்டார். பின்னர் முதல் பாதி முடிவில் கூடுதலாக 2 நிமிடம் அளிக்கப்பட்டது. அதில் மும்பை சிட்டி எஃப்சியின் சேஹ்னாஜ் சிங்கிற்கு 'மஞ்சள்' அட்டை காட்டப்பட்டது. தொடர்ந்து மும்பை சிட்டி எஃப்சியின் மோடோ சௌகௌ மேலும் ஒரு கோல் அடிக்க முயற்சி செய்ய பந்து கோல் போஸ்டின் விளிம்பில் பட்டு சென்றது. எனவே, முதல் பாதியில் ரேய்னியர் ஃபெர்னான்டஸ் உதவியுடன் மும்பை சிட்டி எஃப்சி 1-0 என முன்னிலை வகித்தது.  

பின்னர் இரண்டாவது பாதி தொடங்கிய 52'வது நிமிடத்தில் சென்னையின் ஐசக் கார்னரிலிருந்து 'பாஸ்' செய்ய அதை அகஸ்டோ தலையால் முட்ட பந்து சற்றே வெளியே சென்றது. இதனைத்தொடர்ந்து 55'வது நிமிடத்தில் மும்பை சிட்டியின் மோடோ சௌகௌ தலையால் முட்டி மேலுமொரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். பின்னர் 62'வது நிமிடத்தில் சென்னையின் அணியின் கால்டெரோன் வெளியேற ஒர்லாண்டி திரும்பினார். தொடர்ந்து மும்பை சிட்டி எஃப்சியின் ஆதிக்கமே அதிகபட்சமாக காணப்பட்டு வந்த நிலையில் 70'வது நிமிடத்தில் பாஸ்டோஸ்க்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. பின்னர் 72'வது நிமிடத்தில் சென்னையின் லால்தின்லியானா வெளியேற ஃப்ரான்சிஸ்கோ திரும்பினார். தொடர்ந்துசென்னையின் அணி ஆட்டத்தை எடுத்து செல்ல போராடி வந்த நிலையில் 79'வது நிமிடத்தில் ஒர்லாண்டி கோலை நோக்கி அடிக்க அதை மும்பை சிட்டியின் கோல்கீப்பர் அம்ரிந்தர் சிங் மீண்டும் அருமையாக தடுத்தார். பின்னர் 83'வது நிமிடத்தில் சென்னையின் அணிக்கு மேலுமொரு வாய்ப்பு கிடைக்க அதை மும்பை அணியின் டிஃபென்டர்ஸ்கள் அருமையாக தடுத்தனர். 

எனவே, மும்பை சிட்டியின் டிஃபென்டிங் மற்றும் கோல் கீப்பரை மேற்கொள்ள திணறிய சென்னையின் அணி 2-0 என மேலுமொரு தோல்வியை தழுவியது. 

விருது நிகழ்வுகள்

இன்றைய க்ளப் விருது - மும்பை சிட்டி எஃப்சி.

ஆட்டத்தின் ஸ்விஃப்ட் லிமிட்லெஸ் விருது - அம்ரிந்தர் சிங்.

ஆட்டத்தின் டிஎச்எல் வின்னிங் பாஸ் விருது - ரஃபேல் பாஸ்டோஸ்.

ஐஎஸ்எல் வளர்ந்துவரும் வீரர் - ரேய்னியர் ஃபெர்னான்டஸ்.

ஆட்டநாயகன் விருது - மோடோ சௌகௌ. 

அடுத்தமேட்ச் அட்டவணை

அடுத்து சென்னையின் எஃப்சி, டெல்லி டைனோமோஸ் எஃப்சி-யை டிசம்பர் 15 ஆம் தேதி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் எதிர்கொள்கிறது. மறுபுறம் மும்பை சிட்டி எஃப்சி, பெங்களூரு எஃப்சி-யை நவம்பர் 09 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீராவா ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.

மேட்ச் ஹைலைட்ஸை காண:

 

 

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்