சென்னையின் எஃப்சி AFC தொடரின் குரூப் ஸ்டேஜ் சுற்றில் சந்திக்கவுள்ள சவால்கள்!

இலங்கை நாட்டை சேர்ந்த கொழும்பு எஃப்சி-யை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி முதல்முறையாக AFC தொடரின் குரூப் ஸ்டேஜ் சுற்றுக்கு முன்னேறியுள்ள இரு முறை ஹீரோ ஐஎஸ்எல் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி தங்களது குரூப் ஸ்டேஜ் போட்டிகளுக்கான அட்டவணையை இன்று அறிவித்துள்ளது. இதன்மூலம் சென்னையின் எஃப்சி அணி ஏப்ரல் 03 ஆம் தேதி முதல் அஹமதாபாத்தில் இருந்து தங்களது குரூப் ஸ்டேஜ் பயணத்தை துவங்குகிறது. 

அட்டவணை விவரம்

குரூப் 'இ' பிரிவில் இடம்பெற்றுள்ள சென்னையின் எஃப்சி அணி இரு லெக் அடிப்படையில் ஹீரோ ஐ-லீக் சாம்பியனான மினெர்வா பஞ்சாப், வங்கதேச லீக் சாம்பியனான அபாஹானி தாக்கா லிமிடெட் மற்றும் நேபால் லீக் சாம்பியனான மானங் மார்ஷ்யங்டி கிளப் போன்ற அணிகளை சந்திக்க இருக்கிறது. 

ஹோம் லெக்

ஏப்ரல் 03 ஆம் தேதி - சென்னையின் எஃப்சி vs மினெர்வா பஞ்சாப், அஹமதாபாத்.

ஏப்ரல் 17 ஆம் தேதி - சென்னையின் எஃப்சி vs மானங் மார்ஷ்யங்டி, அஹமதாபாத்.

ஏப்ரல் 30 ஆம் தேதி - சென்னையின் எஃப்சி vs அபாஹானி லிமிடெட் தாக்கா, அஹமதாபாத். 

அவே லெக்

மே 15 ஆம் தேதி -  அபாஹானி லிமிடெட் தாக்கா vs சென்னையின் எஃப்சி,

தாக்கா(வங்கதேசம்).

ஜூன் 19 ஆம் தேதி - மினெர்வா பஞ்சாப் vs சென்னையின் எஃப்சி, புபனேஷ்வர்(இந்தியா).

ஜூன் 26 ஆம் தேதி - மானங் மார்ஷ்யங்டி vs சென்னையின் எஃப்சி, காத்மாண்டு(நேபால்).

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்