எஃப்சி கோவா-வை வீழ்த்தி, பெங்களூரு எஃப்சி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது

மும்பையில் உள்ள மும்பை கால்பந்து அரேனாவில் நடைபெற்ற ஹீரோ ஐஎஸ்எல் தொடரின் ஐந்தாவது சீசனின் இறுதிப்போட்டியில் பெங்களூரு எஃப்சி 1-0 கோல் கணக்கில் எஃப்சி கோவா-வை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

இப்போட்டியில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள்

  • 90 நிமிடத்திற்கு பிறகு கூடுதலாக 15 நிமிடம் வழங்கப்பட்டது.
  • 105'வது நிமிடத்தில் கோவா எஃப்சி-யின் அஹ்மத் ஜாஹோ-க்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
  • அடுத்து இரண்டாவது முறையாக மேலும் 15 நிமிடம் வழங்கப்பட்டது.
  • 117'வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் பெக்கே கோல் அடித்து அணியை வெற்றிபெற உதவினார். 

இப்போட்டியை பற்றின முழுமையான விளக்கம்

ஆட்டம் தொடங்கியதும் சிறிது நேரம் பெங்களூரு எஃப்சி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் ஒரு சில வாய்ப்புகளை நட்சத்திர வீரர் மிக்கு கோலாக மாற்ற தவறி வந்தார். பின்னர் முதல் 10 நிமிடத்துக்கு பிறகு எஃப்சி கோவா அணி எழுச்சி கண்டு ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி கோரோமினஸ் மூலம் எதிரணிக்கு அச்சுறுத்தல் காட்டி வந்தது. அடுத்து மீண்டும் 24' மற்றும் 27'வது நிமிடத்தில் பெங்களூரு அணியினர் நல்ல வாய்ப்புகளை நூலிழையில் தவறவிட்டனர். தொடர்ந்து ஆட்டம் செல்ல இரு அணிகளின் பிடியில் பந்து சரி சமமாக இருந்து வந்தது. 

பின்னர் முதல் பாதி நெருங்கி வருகையில் 45+1'வது நிமிடத்தில் கோவா அணியின் கேப்டன் மண்டர் தேசாய் காயத்தால் வெளியேற சேவியர் காமா திரும்பினார். இதனைத்தொடர்ந்து முதல் பாதி முடிவுக்கு வர ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் இருந்தது. 

பின்னர் இரண்டாவது பாதி தொடங்க 47'வது நிமிடத்தில் கோவா அணியின் அஹமது ஜாஹோ-க்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. அடுத்து 51'வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் பர்ரேரா-க்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. தொடர்ந்து ஆட்டம் செல்ல 63'வது நிமிடத்தில் கோவா அணியின் கோரோமினஸ் மீண்டும் ஒரு வாய்ப்பை கோல் செய்ய தவறினார். இதன்பின்னர் 81'வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிக்கு கிடைத்த வாய்ப்பை கோலை நோக்கி அடிக்க பந்து சற்றே கோல் போஸ்டின் விளிம்பில் பட்டு வெளியேறியது. இதனைத்தொடர்ந்து 90+2' நிமிடத்தில் ஆட்டம் முடிவுக்கு வர ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் இருந்தது. 

பின்னர் கூடுதலாக 15 நிமிடம் வழங்கப்பட, அதில் இரண்டு அணிகளும் முதல் கோல் அடிக்க முயன்று வர 104'வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சிஸ்கோ கோலை நோக்கி அடிக்க அதை கோவா அணியின் கோல்கீப்பர் நவீன் குமார் அபாரமாக தடுத்தார். அடுத்து 105'வது நிமிடத்தில் அஹ்மத் ஜாஹோ-க்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொடுக்கப்பட்ட 15 நிமிடம் நிறைவுக்கு வர ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் இருந்தது. 

அடுத்து மீண்டும் கொடுக்கப்பட்ட கடைசி 15 நிமிட ஆட்டத்தில் கோவா அணி 10 வீரர்களை கொண்டு விளையாட ஆட்டத்தின் 117'வது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை டிமாஸ் அடிக்க அதை ராகுல் பெக்கே தலையால் முட்டி கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதனைத்தொடர்ந்து கொடுக்கப்பட்ட 15 நிமிடம் நிறைவுக்கு வர பெங்களுரு எஃப்சி 1-0 கோல் கணக்கில் கோவா எஃப்சி-யை வீழ்த்தி முதல்முறையாக ஹிரோ ஐஎஸ்எல் பட்டத்தை தட்டிச்சென்றது. 

விருது நிகழ்வுகள்

ஆட்டத்தின் ஸ்விஃப்ட் லிமிட்லெஸ் விருது - மோர்தடா.

ஆட்டத்தின் டிஎச்எல் வின்னிங் பாஸ் விருது - டிமாஸ் டெல்காடோ.

ஐஎஸ்எல் வளர்ந்துவரும் வீரர் - நிஷு குமார்.

ஆட்டநாயகன் விருது - ராகுல் பெக்கே. 

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்