AFC குரூப் ஸ்டேஜ்: சென்னையின் எஃப்சி, மினெர்வா பஞ்சாப் ஆட்டம் சமனில் முடிந்தது

அஹமதாபாத்தில் உள்ள அரேனா பை ட்ரான்ஸ்டேடியா-வில் நடைபெற்ற சென்னையின் எஃப்சி, மினெர்வா பஞ்சாப்-க்கிடையே நடந்த AFC கோப்பை-யின் குரூப் ஸ்டேஜ் ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது. 

ஆட்டத்தை பற்றின முழுமையான விளக்கம் 

இரு அணிகளும் நிதானமாய் ஆட்டத்தை தொடங்க AFC கோப்பையின் குரூப் ஸ்டேஜ் ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சிறப்பாக துவங்கியது. பின்னர் 21'வது நிமிடத்தில் தோய் சிங் சிறப்பாக கோலை நோக்கி அடிக்க அதை மினெர்வா பஞ்சாப்-பின் கோல்கீப்பர் அருமையாக தடுத்தார். அடுத்து 27'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் மெயில்சன் பந்தை தலையால் முட்ட பந்து சற்றே கோல் போஸ்டிற்கு மேலாக சென்றது. பின்னர் 28'வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி-யின் கோல்கீப்பர் கரஞ்சித் சிங் அடுத்தடுத்து எதிரணியின் கோல் வாய்ப்பை தடுத்தார். இதனைத்தொடர்ந்து முதல் பாதி முடிவுக்கு வர,  ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் இருந்தது.

அடுத்து இரண்டாவது பாதி தொடங்க 54'வது நிமிடத்தில் மினெர்வா பஞ்சாப் அணியினர் மீண்டும் கோல் அடிக்க முயற்சி செய்ய அதை கரஞ்சித் சிங் அருமையாக தடுத்தார். பின்னர் 55'வது நிமிடத்தில் நர்சரி வெளியேற தாப்பா திரும்பினார். தொடர்ந்து ஆட்டம்  செல்ல 65'வது நிமிடத்தில் மினெர்வா பஞ்சாப்-பின் 'ஃப்ரீ-கிக்' வாய்ப்பை அகஸ்டோ அருமையாக தடுத்தார். அடுத்து 76'வது நிமிடத்தில் தாப்பா அடித்த கார்னர் வாய்ப்பை வினீத் அடிக்க பந்து சற்றே மேலாக சென்றது.  பின்னர் 80'வது நிமிடத்தில் தோய் சிங் வெளியேற தன்பால் கணேஷ் திரும்பினார். இதனைத்தொடர்ந்து ஆட்டம் முடிவுக்கு வர,  இரு அணிகளும் வாய்ப்புகளை கோலாக மாற்ற தவறியதால் ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது. 

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்