சென்னையின் எஃப்சிக்கு வாழ்வா - சாவா போட்டி

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) 2018-2019 சீசனில் முதல் கட்டமாக அனைத்து அணிகளும் தங்கள் முதல் பாதி போட்டியை விளையாடி உள்ள நிலையில் அடுத்த பாதி போட்டியை தொடங்கியுள்ளனர். இரண்டாவது பாதியின் ஒரு அங்கமாக  சென்னையின் எஃப்சி அடுத்ததாக மும்பை சிட்டி எஃப்சியை மும்பையில் உள்ள மும்பை கால்பந்து அரேனாவில் டிசம்பர் 06 ஆம் தேதி(வியாழக்கிழமை) எதிர்கொள்கிறது.  

ஒருபுறம் சென்னையின் எஃப்சி அடுத்தடுத்து தோல்வியிலிருந்து மீளும் முனைப்பிலும் மறுபுறம், மும்பை சிட்டி எஃப்சி அடுத்தடுத்து போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடனும் மோதவுள்ளனர். 

சென்னையின் எஃப்சி

இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய சென்னையின் எஃப்சி 1 வெற்றி, 2 ட்ரா மற்றும் 7 தோல்வி என தரவரிசை பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. மேலும், சென்னையின் எஃப்சி கடைசியாக ஏடிகே அணியிடம் 3-2 என தோல்வியை தழுவியுள்ளது. 

சென்னையின் எஃப்சியை பொறுத்தவரை கடந்த சில போட்டிகளில் எளிய வாய்ப்புகளை தவறவிடுவதும், டிஃபென்டிங்கில் சொதப்புவதும் தோல்விக்கு காரணமாக அமைகிறது. முன்னதாக ஒவ்வொரு போட்டிகளிலும் அகஸ்டோ சிறப்பாக 'பாஸ்' செய்து வாய்ப்புகளை உருவாக்கி தருகிறார் ஆனால் அதை கோல் ஆக மாற்ற 'ஸ்ட்ரைக்கர்ஸ்கள்' தவறிவருகின்றனர். முக்கியமாக ஜேஜே லால்பெக்லுவா இந்த சீசனில் இதுவரைக்கும் ஒரு கோலும் அடிக்கவில்லை. மேலும் மற்றொரு ஸ்ட்ரைக்கரான கார்லோஸ் சாலோமும் போதிய அளவுக்கு சிறப்பாக காணப்படவில்லை. எனவே, ஜான் க்ரெகோரி வழிநடத்தும் சென்னையின் அணியில் தொடர்ந்து மேலும் பல அனுபவ வீரர்கள் சொதப்பி வருவதால் இந்த போட்டியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மும்பை சிட்டி எஃப்சி

இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய மும்பை சிட்டி எஃப்சி 5 வெற்றி, 2 ட்ரா மற்றும் 2 தோல்வி என தரவரிசை பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. மேலும், மும்பை சிட்டி எஃப்சி கடைசியாக டெல்லி டைனமோஸ் எஃப்சியை 4-2 என வீழ்த்தியுள்ளது. 

ஜார்ஜ் கோஸ்டா வழிநடத்தும் மும்பை சிட்டி அணி கடைசி 5 போட்டிகளில் ஒரு தோல்வியும் காணாமல் தங்களது சிறப்பான ஃபார்மில் உள்ளது. அணியில் லூசியான் கோயியன் மற்றும் சுபாஷிஸ் போஸ் டிஃபென்டிங்கில் சிறப்பாக திகழ்ந்துவருகின்றனர். மேலும் மிட்ஃபீல்டில் செஹ்னாஜ் மற்றும் மக்காடோ சிறப்பாக காணப்பட்டுவருகின்றனர். தொடர்ந்து மும்பை சிட்டி எஃப்சி தங்களது வெற்றி நடையை தொடரும் முனைப்பில் காணப்பட்டு வருகிறது.     

இந்த சீசனில் இதற்கு முன்பு இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும்போது மும்பை சிட்டி 1-0 என சென்னையின் எஃப்சியை வீழ்த்தியிருந்தது. 

அறிய தகவல்

*சென்னையின் எஃப்சியின் அகஸ்டோ இந்த சீசனில் அதிக 'பாஸ்'(697) செய்திருக்கிறார்.

*மும்பை சிட்டி எஃப்சி இந்த சீசனில் அதிக 'க்ளீன் ஷீட்ஸ்' செய்திருக்கிறது. 

ஆடும் Xl வாய்ப்புள்ள வீரர்கள்

சென்னையின் எஃப்சி

சஞ்சீபன் கோஷ், ஃப்ரான்சிஸ்கோ, இனிகோ கால்டெரோன், எலி சபியா, ஜெர்ரி லால்ரின்ஸ்வாலா, அனிருதா தாப்பா, ஒர்லாண்டி, ரஃபேல் அகஸ்டோ, க்ரிகோரி நெல்சன், ஐசக் வன்மல்சாவ்மா, ஜேஜே லால்பெக்லுவா.  

மும்பை சிட்டி எஃப்சி

அம்ரிந்தர் சிங், சோவிக் சக்ரபர்த்தி, சுபாஷிஸ் போஸ், லூசியான் கோயியன், ஜாய்னர் லாரென்சோ, பவுலோ ரிச்சர்டோ மக்காடோ, ஈசோகோ அர்னால்டு, மோடோ சௌகௌ சேஹ்னாஜ் சிங், மிலன் சிங், ராய்னிர் ஃபெர்னான்டஸ். 

நேருக்குநேர் மோதியது

இரு அணியும் இதற்கு முன்பு 9 முறை மோதியுள்ளது. அதில் சென்னையின் எஃப்சி 5 முறையும்,

மும்பை சிட்டி எஃப்சி 3 முறையும் வென்றுள்ளது, 1 முறை சமனில் முடிந்துள்ளது.

Your Comments

Your Comments

தொடர்புடைய செய்திகள்

புகைப்படங்கள்

வீடியோக்கள்